சைலன்டா காசு பாக்கும் லாரன்ஸ்!..சந்திரமுகி-2 படத்திற்காக அவர் வாங்கும் சம்பளம் எவ்வளவு தெரியுமா?..
பல முன்னனி நடிகர்கள் இருந்தாலும் பல நடிகர்களின் பேரும் புகழும் வெளியே வருவதில்லை. மீடியாக்களும் சரி ரசிகர்களும் சரி தன் ஆஸ்தான நடிகர்களின் தகவல்களை சேகரிப்பதிலேயே குறியாக இருக்கின்றனர். ஆனால் சில நடிகர்களின் நடிப்பும் திறமையும் மறைக்கபடுகிறது.
இந்த லிஸ்டில் இருக்கிற நடிகர் தான் நடிகர் ராகவா லாரன்ஸ். எத்தனை பேருக்கு தெரியும் இவர் ஒரு படத்திற்கு வாங்கும் சம்பளம் எவ்வளவு என்று? மேலும் சில தினங்களுக்கு முன் தான் சமூக வலைதள பக்கத்தில் தான் நடத்தும் ஆஸ்சிரமத்திற்கு யாரும் நன்கொடை கொடுக்க வேண்டாம் எனவும் நான் இப்பொழுது நல்லா சம்பாதித்துக் கொண்டிருக்கிறேன் என்றும் அதை வைத்து நான் பார்த்துக் கொள்கிறேன் என்றும் அறிக்கை விட்டிருந்தார்.
அந்த வகையில் இப்பொழுது ராகவா லாரன்ஸ் சந்திரமுகி-2 படத்தில் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கிறார். அது போக கைவசம் ஏராளமான படங்களை வைத்து கொண்டு மிகவும் பிஸியாக இருக்கிறார் ராகவா லாரன்ஸ்.
இந்த நிலையில் சந்திரமுகி - 2 படத்திற்கு இவர் வாங்கும் சம்பளம் பற்றி தகவல்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது. அந்த படத்திற்கு மட்டும் ராகவா லாரன்ஸ் 27 கோடி ரூபாயை சம்பளமாக பெற்றிருக்கிறாராம். இது பிரபலங்கள் மத்தியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருக்கிறது.