ரஜினி 171 படத்தில் இவர்தான் வில்லன்!.. இது கன்ஃபார்ம் நியூஸ்!.. எதிர்பார்க்கவே இல்லையே!…

Published on: February 16, 2024
rajini
---Advertisement---

ஜெயிலர் படம் சூப்பர் ஹிட் அடித்துள்ள நிலையில் ரஜினி ஒரே நேரத்தில் 3 படங்களில் நடிக்க ஒப்புகொண்டார். அதில் ஒன்று மகள் இயக்கிய லால் சலாம். இதில் கெஸ்ட் ரோல் என்பதால் சில நாட்கள் மட்டும் படப்பிடிப்பில் கலந்துகொண்டார். ஒருபக்கம், ஜெய்பீம் பட இயக்குனர் ஞானவேல் இயக்கத்தில் வேட்டையன் படத்திலும் நடித்தார்.

இந்த படத்தில் அமிதாப்பச்சன், பஹத் பாசில், ராணா, ரித்திகா சிங் உள்ளிட்ட பலரும் நடித்து வருகின்றனர். இப்படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட முடிந்துவிட்டது. இன்னும் சில நாட்கள் மட்டும் படப்பிடிப்பு பாக்கி உள்ளது. லைக்கா நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்து வருகிறார்.

இதையும் படிங்க: சூப்பர்ஸ்டார் ஆக்கிய நண்பரை இரண்டு படத்தில் நடிக்க வைத்த ரஜினிகாந்த்… ஹிட் படத்தில் வரது இவர்தானா?

இந்த படத்தை முடித்தபின் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினி ஒரு புதிய படத்தில் நடிக்கவிருக்கிறார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கும் அனிருத்துதான் இசை. லோகேஷ் கனகராஜுக்கு என தனி ரசிகர் கூட்டம் இருப்பதால் அவர் ரஜினியுடன் இணையும் படத்திற்கு பெரிய எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. இது ரஜினியின் 171வது திரைப்படமாகும்.

கமலுடன் விக்ரம் படத்தில் இணைந்த லோகேஷ் இந்த படம் மூலம் ரஜினியுடன் இணையவிருக்கிறார். விஜயை வைத்து அவர் இயக்கிய லியோ படம் எதிர்மறையான விமர்சனங்களை பெற்றது. எனவே, தலைவர் 171 படத்துக்கு மிகவும் கவனமாக திரைக்கதை எழுதி வருகிறார்.

இதையும் படிங்க: நம்ம ரஜினி மருமகளா இது?!.. நகைக்கடை பொம்மை போல ஜொலிக்கிறாரே!.. வைரல் புகைப்படங்கள்!..

இந்நிலையில், இந்த படத்தில் ராகவா லாரன்ஸ் வில்லனாக நடிப்பது உறுதியாகியுள்ளது. ரஜினியின் தீவிர பக்தர் ராகவா லாரன்ஸ். ரஜினி மூலம் சினிமாவில் நுழைந்தவர் அவர். ரஜினியை போலவே ராகவேந்திராவை தனது கடவுளாக கொண்டவர். இவருக்கு எப்படியாவது ரஜினியுடன் ஒரு படத்தில் நடித்துவிட வேண்டும் என்பது ஆசை.

ஆனால், இதுவரை அதுநடக்கவில்லை. ஆனால், அவரின் ஆசையை லோகேஷ் கனகராஜ் நிறைவேற்றி வைத்திருக்கிறார் என்றுதான் சொல்ல வேண்டும். அதேநேரம், தலைவர் 171 படத்தில் வேறு சில வில்லன்களும் இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

சிவா

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.