கேபிஒய் பாலா இப்போ உதவி செய்வதை பார்க்கும் பலரும் அவர் அரசியலில் ஈடுபடப் போகிறார் என்றே விமர்சித்து வருகின்றனர். ஆனால், கேபிஒய் பாலாவுக்கு முன்னோடியாக 20 வருடங்களாக பல பேருக்கு ராகவா லாரன்ஸ் உதவி செய்துக் கொண்டே இருக்கிறார். ஆனால், அவர் எந்தவொரு அரசியல் கட்சியிலும் தன்னை இதுவரை இணைத்துக் கொள்ளவில்லை.
4 வயதில் அப்பா, அம்மா இல்லாத ஒரு ஆதரவற்ற குழந்தையை ராகவா லாரன்ஸ் வீட்டுக்கு கொண்டு வந்த போது யாரு குழந்தைங்கன்னு அவர் மனைவி கேட்டுள்ளார். இனிமேல், நம்ம குழந்தை தான் என வளர்க்க ஆரம்பித்த ராகவா லாரன்ஸ் இதுவரை 60க்கும் மேற்பட்ட ஆதரவற்ற குழந்தைகளை தத்தெடுத்து வளர்த்து வருகிறார்.
இதையும் படிங்க: விஜய்யை வச்சு செய்யும் முடிவில் லோகேஷ் கனகராஜ்!.. தலைவர் 171 படத்தோட டைட்டில் இதுதானா?..
மேலும், பல ஊனமுற்றவர்களுக்கும் ஆதரவாக இருந்து வருகிறார். 20 வருடங்களுக்கு முன்பு ராகவா லாரன்ஸ் எடுத்து வளர்த்த மகன் இன்று படித்து பெரியாளாக மாறியுள்ள நிலையில், இனிமேல், அவன் ஒரு குழந்தையை தத்தெடுத்து வளர்க்கப் போகிறான் என ராகவா லாரன்ஸ் அம்மா, அப்பா இல்லாத சிறுவனை அவன் வசம் ஒப்படைக்கும் வீடியோ சற்றுமுன் வெளியாகி இருக்கிறது.
அந்த வீடியோவை பார்க்கும் கேபிஒய் பாலா எப்படி ஒரு மனுஷனால 20 வருஷமா இப்படி அடுத்தவங்களுக்கு உதவி செய்ய முடியுது என புகழ்ந்து பேசியுள்ளார். உங்களால் முடிந்த உதவியை பிறருக்கு செய்யுங்கள் என்றும் உதவி செய்பவர்கள் குறித்து புறம் பேச வேண்டாம் என்றும் அந்த வீடியோவ பார்த்த பலரும் கமெண்ட் அடித்து வருகின்றனர்.
இதையும் படிங்க: யம்மாடி!.. காமப் பார்வையால இருக்கு!.. கோட்டை கழட்டி காட்டும் சமந்தா!.. இதுக்கு மேல தாங்காதும்மா!..
ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்தின் மூலம் மிகப்பெரிய வெற்றியை ருசித்த ராகவா லாரன்ஸ் அடுத்தடுத்து படங்களில் கவனம் செலுத்தி வருகிறார். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகவுள்ள தலைவர் 171வது படத்திலும் இவர் நடிக்கப் போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
சமீபத்தில், கேபிஒய் பாலாவின் கோரிக்கையை ஏற்று பள்ளிக்கூடம் ஒன்றில் மாணவர்களுக்கு கழிப்பறை கட்டிக் கொடுத்த ராகவா லாரன்ஸ் கணவரை இழந்த பெண் ஒருவருக்கு ஆட்டோ ஒன்றையும் வாங்கிக் கொடுத்திருந்தார்.
பிரபல காமெடி…
விவாகரத்து வழக்கு…
Simran: தமிழ்…
Suriya 45:…
விடுதலை 2…