முகத்துக்கு நேராக சொன்ன ராகவா லரன்ஸ்.. அதிர்ந்து போன ரஜினி.. இதெல்லாம் நடந்திருக்கா?!..
நடிகர் ரஜினிக்கு ஆன்மீகத்தில் பெரிய ஈடுபாடு உள்ளது எல்லோருக்கும் தெரிந்த விஷயம்தான். அவர் நடிக்கும் படங்களில் கடவுளை அவர் வணங்குவது போலவும், ஆண்டவன் என்கிற வார்த்தை தொடர்பான வசனங்களை பேசுவார். ஆனால், ஆன்மிகம் தொடர்பாக அவர் நடித்த திரைப்படங்கள் தோல்வியை சந்தித்ததுதான் அவரின் சினிமா வரலாறு.
அவரின் நூறாவது படமான ராகவேந்திரா ஒரு தோல்விப்படமாகும். அதேபோல், அவர் ஆசையாக நடித்த பாபா திரைப்படமும் வசூல் ரீதியாக ஒரு தோல்விப்படமாகும். அவரின் ரசிகர்களுக்கு அப்படம் பிடிக்கவில்லை. இப்படம் வெளியாகி நஷ்டம் ஏற்பட்ட வினியோகஸ்தர்களுக்கு ரஜினி பணத்தை திருப்பி கொடுத்த சம்பவங்களும் நடந்தது.
ஆனால், இப்படம் உருவான போதே இப்படத்தில் நடித்த கவுண்டமணி ‘ இந்த படம்லாம் ஓடாதுப்பா’ என ரஜினியின் சொன்னாராம். ஆனால், இப்படத்தில் நடிக்காத ஒரு நடிகரும், ரஜினியின் தீவிர ரசிகருமான லாரன்ஸ் இப்படம் ஓடாது என ரஜினியின் சொன்ன செய்தியைத்தான் நாம் இங்கே பார்க்கப்போகிறோம்.
இப்படத்தில் இடம் பெற்ற ஒவ்வொரு பாடல் காட்சிகளையும், ஒவ்வொரு நடன இயக்குனர் அமைக்க வேண்டும் என ஆசைப்பட்ட ரஜினி, ராகவா லாரன்ஸை அழைத்து ஒரு பாடலுக்கு நீ நடனம் அமை என்றாராம். முழு படத்தையும் எனக்கு போட்டு காட்டுங்கள். அப்போதுதான் கதையோட்டம் பிரிந்து என்னால் நடனமைக்க முடியும் என லாரன்ஸ் கூற, ரஜினியும் அவருக்கு படத்தை அவருக்கு போட்டு காட்டியுள்ளார். பாபா படத்தை பார்த்த லாரன்ஸ் ‘இந்த படம் ஓடாது சார்’ என ரஜினியின் முகத்திற்கு நேராகவே சொல்லிவிட்டாராம்.
ராகவா லாரன்ஸ் இப்படி சொன்னது ரஜினிக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியதாம். லாரன்ஸ் அங்கிருந்து சென்ற பின் ‘இவன் இன்னும் என் ரசிகனாவே இருக்கிறான். இத்தனை வருடங்களாக சினிமாவில் இருக்கின்றான். படங்கள் நடித்துள்ளான். ஆனால்,இன்னும் பொதுவான சினிமா பார்வையிலேயே இப்படத்தை பார்த்துள்ளான். அதனால்தான் அவனுக்கு பிடிக்கவில்லை’ என கருத்து தெரிவித்தாராம்.
ஆனால்,ராகவா லாரன்ஸ் சொன்னது போலவே பாபா படம் ஓடவில்லை. இப்படத்தை சமீபத்தில் மீண்டும் வெளியிட்டார் ரஜினி. ஆனால், இப்போதும் அப்படம் வரவேற்பை பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: லண்டனில் சங்கீதா!..தனியாக வசிக்கும் விஜய்.. இருவரும் பிரிய போகிறார்களா?.. அதிர்ச்சி தகவல்