அடுத்த வருஷம் ராகவா லாரன்ஸுக்கு செம ட்ரீட் தான் போலயே.. எல்லாமே மாஸ் டைரக்டர்கள்..!

Raghava Lawrence: டான்ஸ் மாஸ்டராக வந்த ராகவா லாரன்ஸ் நடிகராக தற்போது கோலிவுட்டில் நடித்து வருகிறார். நிறைய படங்களில் நடித்தால் கூட அவரின் நடிப்புக்கு சரியான தீனியாக அமைந்து இருக்கிறது சமீபத்தில் வெளியான ஜிகர்தண்டா டபுள் எக்ஸ். டான்ஸராக கோலிவுட்டுக்குள் வந்தவர் ராகவா லாரன்ஸ். பின்னர் சினிமாவில் பெரிய படங்களுக்கு டான்ஸ் மாஸ்டராக இருந்தார்.
அஜித்தின் அமர்க்களம் படத்தில் தான் முதல்முறையாக சினிமாவில் ஒரு பாடலுக்கு டான்ஸ் ஆடி இருப்பார். அந்த பாடல் அவருக்கு நல்ல ரீச்சை கொடுத்தது. நடிகனாக அற்புதம் படத்தில் நடித்தார். பெரிய அளவில் வசூல் செய்யவில்லை என்றாலும் படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. அதற்கடுத்த சில பட வாய்ப்புகள் வந்தாலும் அவருக்கு பெரிய வெற்றி படங்கள் கிடைக்கவில்லை. அதை தொடர்ந்து முனி என்ற பேய் படத்தில் நடித்தார்.
இதையும் படிங்க: விஜய் வாய்க்கு வந்ததை பேசுனாரு.. அது எதுமே நடக்காது.. இதையாவது செஞ்சா போதும்.. கே. ராஜன் அதிரடி!
படம் மிகப்பெரிய வெற்றி படமாக அமைந்தது. கிட்டத்தட்ட அந்த சமயத்தில் தான் நிறைய பேய் படங்கள் ரிலீசாக தொடங்கியது. அடுத்து காஞ்சனா படத்தில் நடித்தார். முனியை விட அதிக வசூல் பெரிய வெற்றியை பெற்றது. இதான் நம்ம ரூட்டுனு பிடிச்சிக்கிட்டாரு. தொடர்ச்சியாக அவர் கேரியரில் நிறைய பேய் படங்களில் நடித்து இருந்தார்.
சமீபத்தில் கூட பி.வாசு இயக்கத்தில் சந்திரமுகி2 படத்தில் நடித்தார். படம் சுமார் வெற்றி தான். அந்த சமயத்திலேயே என் தொண்டு நிறுவனத்துக்கு இனி யாரும் எந்த நன்கொடையும் செய்ய வேண்டாம். நான் இனி வருடத்துக்கு 3 படங்களில் நடிக்க போகிறேன். அதில் பார்த்து கொள்கிறேன் என்றார்.
இதையும் படிங்க: அது ‘பாஸ்’ இல்லைங்க! தளபதி 68 பற்றி அர்ச்சனா கல்பாத்தியே சொன்ன சூப்பர் தகவல்!
இதை தொடர்ந்து அயலான் டைரக்டர் ரவிகுமாருடன் கதை டிஸ்கஷனில் இருப்பதாகவும் பேச்சு வார்த்தை நடத்தப்பட்டு இருக்கிறது. இது இல்லாமல் தலைவர்171ல் ஒரு கதாபாத்திரத்தில் நடிப்பார் எனவும் தகவல்கள் கிசுகிசுக்கிறது. விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வரலாம்.