Connect with us

Cinema News

ரஜினியால் பயங்கர லாபம் பார்த்த லாரன்ஸ் படம்… லம்ப்பா தூக்கிய தயாரிப்பாளர்..

கடந்த 2005 ஆம் ஆண்டு ரஜினிகாந்த், நயன்தாரா, பிரபு, ஜோதிகா ஆகியோரின் நடிப்பில் மாஸ் ஹிட் ஆன திரைப்படம் “சந்திரமுகி”. இத்திரைப்படத்தை பி வாசு இயக்க சிவாஜி புரொடக்சன்ஸ் நிறுவனம் தயாரித்தது. ரஜினிகாந்த் திரைப்பயணத்தில் ஒரு தனித்துவமான ஹாரர் திரைப்படமாக “சந்திரமுகி” அமைந்தது. இத்திரைப்படம் 1000 நாள் ஓடி தமிழ் சினிமா வரலாற்றில் பெரும் சாதனை படைத்தது.

இந்த நிலையில் “சந்திரமுகி 2” திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது மும்முரமாக நடைபெற்று வருகிறது. திரைப்படத்தின் முதல்கட்டப் படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் இரண்டாம்கட்டப் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளது.

இத்திரைப்படத்தில் ராகவா லாரன்ஸ், ராதிகா சரத்குமார், வடிவேலு ஆகியோர் நடித்து வருகின்றனர். “சந்திரமுகி” திரைப்படத்தில் வடிவேலுவின் காமெடி வேற லெவலில் ஒர்க் அவுட் ஆகியது. அதே போல் “சந்திரமுகி 2” திரைப்படத்திலும் வடிவேலு காமெடி ஒர்க் அவுட் ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் தற்போது “சந்திரமுகி 2” திரைப்படம் வெளிவரும் முன்பே படக்குழு ஓடிடி நிறுவனத்திற்கு பல கோடி ரூபாய்க்கு படத்தை விற்றுள்ளதாக தகவல் வருகிறது. “சந்திரமுகி 2” திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி சில வாரங்களிலேயே “நெட்ஃபிலிக்ஸ்” ஓடிடி தளத்தில் வெளிவரும் என செய்திகள் தெரிவிக்கின்றன.

“சந்திரமுகி” திரைப்படத்தின் மாபெரும் வெற்றியை கருத்தில் கொண்டு “சந்திரமுகி 2” திரைப்படம் வேற லெவலில் பிசின்ஸ் ஆகியுள்ளதாகவும் கூறப்படுகிறது. எதுவாகினும் “சந்திரமுகி 2” திரைப்படம் “சந்திரமுகி” திரைப்படம் அளவுக்கு ரசிகர்களுக்கு திருப்தி  அளிக்குமா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.

google news
Continue Reading

More in Cinema News

To Top