எடிட்டரை போட்டு படாத பாடு படுத்திய ராகவா லாரன்ஸ்… ஒரு படம் ஓடுறதுக்கு என்னென்னலாம் பண்ண வேண்டியதா இருக்கு?
“முனி”, “காஞ்சனா” ஆகிய திரைப்படங்கள் வேற லெவல் ஹிட் அடித்ததை தொடர்ந்து தமிழில் பல திரைப்படங்களில் நடித்து வருகிறார் ராகவா லாரன்ஸ். தற்போது பி.வாசு இயக்கத்தில் “சந்திரமுகி 2” திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
இந்த நிலையில் ராகவா லாரன்ஸ் நடிப்பில் உருவான “ருத்ரன்” திரைப்படம் நாளை தமிழ் புத்தாண்டை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இத்திரைப்படத்தில் ராகவா லாரன்ஸுக்கு ஜோடியாக பிரியா பவானி சங்கர் நடித்துள்ளார். மேலும் சரத்குமார், பூர்ணிமா பாக்யராஜ், நாசர், ரெடின் கிங்கஸ்லி, காளி வெங்கட் போன்ற பலரும் நடித்துள்ளனர்.
இத்திரைப்படத்தை எஸ்.கதிரேசன் தயாரித்து இயக்கியுள்ளார். ஜி.வி.பிரகாஷ், தரண் குமார், ஓஃப்ரோ, சாம் சி.எஸ். ஆகியோர் இத்திரைப்படத்திற்கு இசையமைத்துள்ளனர். இத்திரைப்படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியானபோது அதில் இடம்பெற்ற ஆக்சன் காட்சிகள் தெலுங்கு திரைப்படத்தை போல் இருந்ததாக பலரும் கூறிவந்தனர்.
இந்த நிலையில் இத்திரைப்படத்தை குறித்த ஒரு சுவாரஸ்ய தகவல் வெளிவந்துள்ளது. அதாவது ராகவா லாரன்ஸ் இத்திரைப்படம் திருப்தியாக உருவாக வேண்டும் என்பதற்காக எடிட் செய்யப்பட்ட காட்சிகளை மீண்டும் மீண்டும் அதன் வரிசைகளை மாற்றிப்பார்த்து எடிட் செய்யச்சொல்கிறாராம். நேற்று வரையும் இந்த எடிட்டிங் வேலைகள் நடந்ததாம். வழக்கமாக ராகவா லாரன்ஸ் மிக எளிதாக திருப்தியடையமாட்டாராம். ஆதலால்தான் இவ்வாறு பல முறை மீண்டும் மீண்டும் காட்சி வரிசைகளை மாற்றி மாற்றி எடிட் செய்துபார்க்கிறாராம்.
இதையும் படிங்க: வளர்த்துவிட்ட சினிமாவை மறக்கலாமா?!.. – நயன்தாராவை லெஃப்ட் ரைட் வாங்கிய பிரபலம்..