தமிழ் சினிமாவின் தவிர்க்கமுடியாத வில்லன் நடிகராக திகழ்ந்தவர் ரகுவரன். தமிழ் சினிமா வில்லனுக்கு உட்பட்ட எந்த ஒரு தோரணையும் இல்லாமல் தனது பாடி லேங்குவேஜ்ஜாலேயே வில்லத்தனத்தை காட்டியவர் ரகுவரன். குறிப்பாக “மனிதன்”, “புரியாத புதிர்”, “பாட்ஷா”, ஆகிய திரைப்படங்களில் இவரது நடிப்பு மிகவும் பாராட்டத்தக்கதாக அமைந்தது.
ரகுவரன் சினிமாவில் நடிக்க வருவதற்கு முன்பு சென்னை எம்.ஜி.ஆர் பிலிம் இன்ஸ்டிட்யூட்டில் நடிப்பு பயின்றுகொண்டிருந்தார் என்பதை சினிமா ரசிகர்கள் பலரும் அறிந்திருப்பார்கள். இந்த நிலையில் பிரபல நடிகரான பப்லு பிரித்விராஜ், ரகுவரனுடன் தான் பழகியது குறித்த அனுபவம் ஒன்றை சமீபத்திய பேட்டி ஒன்றில் பகிர்ந்துகொண்டுள்ளார்.
அதாவது ரகுவரன் தனது முதல் திரைப்படமான “ஏழாவது மனிதன்” திரைப்படத்தில் நடித்துக்கொண்டிருந்தபோது, பப்லுவும் அவரும் ஒரு நாள் இரவு பேசிக்கொண்டிருந்தார்களாம். அப்போது பப்லு “நான் சைக்கோ கதாப்பாத்திரங்களில் நடிக்க வேண்டும் என ஆசைப்படுகிறேன்” என்று அவரிடம் கூறினாராம்.
இதையும் படிங்க: விஜய் பட இயக்குனரை நம்பி மோசம் போன மகேஷ் பாபு… அடக்கொடுமையே!!
அதற்கு ரகுவரன் “டேய், இந்த வில்லனா நடிக்கிறதுங்குறது ரொம்ப ஈஸிடா. ஹீரோவா நடிக்கிறதுதான்டா கஷ்டம்” என்று கூறினாராம். அதற்கு பப்லு “ஏன்?” என்று கேட்க “வில்லனாக நடிக்கிறவன் ஓவர் ஆக்டிங்க் பண்ணலாம், அன்டர் பிளே பண்ணலாம், எப்படி வேணாலும் நடிக்கலாம். ஒன்னும் சொல்ல மாட்டாங்க. ஆனால் ஹீரோ அப்படி இல்லடா. அவன் அழும்போது கூட Handsome ஆ அழுகனும்டா” என்று கூறினாராம்.
பப்லு பிரித்விராஜ்ஜும் ரகுவரனும் இவ்வளவு நெருக்கமான நண்பர்களாக இருந்திருக்கிறார்கள் என்ற செய்தி இதுவரை யாரும் அறிந்திடாத செய்தியாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
Vijay serials:…
Vignesh Shivan: …
பிக்பாஸ் சீசன்…
இப்போது சினிமா…
NEEK Movie:…