படப்பிடிப்பில் அதகளம்!.. கேரவனை விட்டு இறங்க மறுத்த ரகுவரன்!.. எப்படி இறங்க வைச்சாங்க தெரியுமா?..
தமிழ் சினிமாவில் கதையை நேர்த்தியாக சொல்வதில் வித்தகர் என அனைவராலும் அறியப்படுபவர் இயக்குனர் கரு.பழனியப்பன். இவர் இயக்கிய சில படங்களில் மிகவும் பேசப்பட்ட திரைப்படங்களாக பிரிவோம் சந்திப்போம், பார்த்திபன் கனவு, சிவப்பதிகாரம் போன்ற திரைப்படங்கள்.
இந்த மூன்று திரைப்படங்களும் நல்ல வெற்றியை பெற்றது. சிவப்பதிகாரம் படத்தின் நடிகர் ரகுவரன் செய்த சில சேட்டைகளை ஒரு பேட்டியில் பகிர்ந்தார் கரு. பழனியப்பன். சிவப்பதிகாரம் படம் அரசியலை பின்புலமாக வைத்து எடுக்கப்பட்ட படமாகும். இந்த படத்தில் ஒரு பேராசிரயராக நடித்திருப்பார் நடிகர் ரகுவரன்.
இளங்கோ என்ற கதாபாத்திரத்தில் பேராசிரியராக வரும் ரகுவரனை முதலில் எப்படி தேர்வு செய்தேன் என்று பழனியப்பன் தெரிவித்தார். இந்த கதாபாத்திரத்தை முடிவு செய்வதற்கு முன் அவர் ஏகப்பட்ட பேராசிரியர்களை நேரில் போய் சந்தித்திருக்கிறார். அதன் பிறகே இந்த கதாபாத்திரத்திற்கு ரகுவரன் பொருத்தமாக இருப்பார் என்று தெரிந்த பிறகே ரகுவரனை அணுகியிருக்கிறார் பழனியப்பன்.
இதையும் படிங்க : நகைக்காக போலீசிடம் சென்ற ராஜ்கிரண் வளர்ப்பு மகள்… ஆனா அவர் மனைவிக்கு இவங்க பொண்ணாமே! குழப்பி விட்ட புது ஜோடி
ரகுவரனும் கதையை கேட்டு பிடித்து போக மறு நாள் படப்பிடிப்பிற்கு வந்தாராம். படப்பிடிப்பிற்கு வந்தவர் கேரவனில் இருந்திருக்கிறார். பழனியப்பன் கேமிரா மற்றும் மற்ற ஷார்ட்கள் எல்லாம் தயார் நிலையில் வைத்து விட்டு ரகுவரனை அழைக்க அவருடைய உதவியாளரை அனுப்பினாராம்.
ஆனால் ரகுவரன் வருகிறேன் என்று சொல்லி அனுப்பிவிட்டாராம். ஆனால் வரவில்லை. திரும்பவும் மற்றுமொரு உதவியாளரை அனுப்பியிருக்கிறார். அப்பவும் வருகிறேன் என்று கூறி வரவில்லையாம். மீண்டும் இன்னொரு உதவியாளரை அனுப்ப அவரிடமும் போ வருகிறேன் என்று கூறி கேரவனை விட்டு இறங்கவே இல்லையாம். உள்ள என்னதான்யா பண்றாரு என பழனியப்பன் கேட்க சும்மாதான் சார் உட்கார்ந்து கொண்டிருக்கிறார் என உதவியாளர்கள் சொல்லவும்
கடுப்பில் பழனியப்பனே போய் ரகுவரனிடம் சார் என்னதான் பிரச்சினை உங்களுக்கு? என கேட்டிருக்கிறார். அதற்கு ரகுவரன் ‘இல்ல அந்த பேராசிரியர் எப்படி உட்கார்ந்திருப்பார்?’ என தன் கதாபாத்திரத்தை பற்றி யோசித்துக் கொண்டிருந்திருக்கிறாராம் இவ்ளோ நேரம். இதை கேட்டதும் பழனியப்பன் இதற்கு தான் வரமாட்டேனு சொன்னீங்களா? என் கிட்ட கேட்டால் சொல்லப்போறேன். அதுக்கு உள்ளேயே உட்கார்ந்திருந்தால் எப்படி?என வெளியே அழைத்து வந்திருக்கிறார்.
இதையும் படிங்க :ஒழுக்கத்திற்கும் ரஜினிக்கும் ரொம்ப தூரம்!..அட இப்படி பொசுக்குனு சொல்லிப்புட்டீங்க?.. கரு.பழனியப்பன் ஓபன் டாக்!..
தன்னுடைய கதாபாத்திரத்திற்காக மிகவும் மெனக்கிடுபவர் ரகுவரன் என்றும் கேரவனில் அவரே சமைத்து சாப்பிடுவார் என்றும் இது வரை அவர் ஸ்மோக் செய்து பார்த்ததில்லை என்றும் ரகுவனை பற்றி பழனியப்பன் தெரிவித்தார்.