More
Categories: Cinema News Jagan latest news

குடிக்கு அடிமையாகி குட்டிச்சுவரா போன ரகுவரன்! மதுவுக்கு அடிக்ட் ஆனதே இதனால்தான் – சகோதரர் பரபரப்பு பேட்டி

தமிழ் திரையுலகில் ஒரு ஒப்பற்ற  நாயகனாக வலம் வந்தார் நடிகர் ரகுவரன். தமிழில் 1982 ஆம் ஆண்டும் வெளியான ஏழாவது மனிதன் என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். வில்லன் கதாபாத்திரத்திலும் குணச்சித்திர கதாபாத்திரத்திலும் நடித்து மக்கள் மத்தியில்  நல்ல வரவேற்பை பெற்றார்.

சம்சாரம் அது மின்சாரம், அஞ்சலி போன்ற திரைப்படங்களில் சிறந்த குணச்சித்திர கதாபாத்திரத்தை வெளிப்படுத்தியதற்காக மக்கள் இவரை வெகுவாக பாராட்டினார்கள். மேலும் அவர் கடைசி காலத்தில் கூட தனுஷ் நடித்த யாரடி நீ மோகினி என்ற படத்திலும் அற்புதமான நடிப்பை வெளிப்படுத்தினார்.

Advertising
Advertising

இதையும் படிங்க : ரகுவரன் லைஃப்ல மிஸ் பண்ணது! தனுஷ் மூலமாக நிறைவேற்றி ஆறுதலடைந்த சம்பவம்

கொடூரத்தனமான வில்லன்  கதாபாத்திரத்தை வெளிப்படுத்திய ரகுவரனுக்குள் இப்படி ஒரு செண்டிமெண்டான முகமா என்று ரசிகர்களை ஆச்சரியப்பட வைத்தது. விஜய், அஜித், சூர்யா இவர்களின் படங்களில் பெரும்பாலும் ஒரு அண்ணனாகவும் , அப்பாகாவும் தன் குணச்சித்திர கதாபாத்திரத்தை அழகாக வெளிக்காட்டியிருப்பார்.

ரஜினிக்கு ஒரு ஒரு ஆஸ்தான வில்லனாகவே ரகுவரன் பார்க்கப்பட்டார். எம்ஜிஆருக்கு எப்படி நம்பியாரோ அதே போல ரஜினிக்கு ரகுவரன் என்று முத்திரை குத்தப்பட்டது. ரஜினியும் ரகுவரனும் சேர்ந்து நடித்தது என்னமோ சொர்ப்ப படங்களாயினும் இவர்கள் கூட்டணியைத்தான் மக்கள் ரசித்தார்கள்.

இதையும் படிங்க : கமலுடன் நடிக்க மறுத்த ரகுவரன்!.. இந்த சின்ன விஷயம்தான் காரணமா?.. அட போங்கப்பா!…

வில்லன், குணச்சித்திர வேடம் இவற்றில் நடித்து வந்த ரகுவரன் கூட்டுப்புழுக்கள், கை நாட்டு, மைக்கேல் ராஜ் ஆகிய படங்களில் கதாநாயகனாகவும் நடித்தார். அதில மைக்கேல் ராஜ் படம் மாபெரும் வெற்றியை தந்தது. சொல்லப்போனால் அந்தப் படத்தில் முதலில் நடிக்க வேண்டியது ரஜினிதானாம். ஆனால் முடியாத பட்சத்தில் ரகுவரன் ஏற்று நடித்து வெற்றிப்படமாக்கியிருக்கிறார்.

இந்த நிலையில் சினிமாவில் சிம்மாசனம் போட்டு அமர்ந்த ரகுவரன் சொந்த வாழ்க்கையை குடியாலேயே கெடுத்துக் கொண்டார். மதுப்பழக்கத்துக்கு தீவிரமாக அடிமையானார். அதனாலேயே பட வாய்ப்புகள் குறையத்தொடங்கியது.

இதையும் படிங்க : இப்பதான் தெரியுது! ரகுவரன் ஹீரோவா நடிக்க படம் எப்படி ஹிட் ஆச்சுனு? ஒரு நாள் இரவில் நடந்த சம்பவம்

ஆனால் இடையிடையே குடியை விட வேண்டும் என பல முயற்சிகளை எடுத்தும் ரகுவரனால் முடியவில்லையாம். இதனிடையில் ரகுவரனின் தம்பி சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் ஏன் ரகுவரன் மதுவுக்கு அடிமையானார் என்பதை சொல்ல முயற்சித்தார்.

ஆனால் அது ரொம்ப பர்ஷனல். அதை சொல்லாமல் இருப்பதுதான் நல்லது என்று அதற்கான காரணத்தை கூற மறுத்துவிட்டார். அவர் கூறியதில் இருந்து ஏதோ ஒரு விஷயத்தால் ரகுவரன் மிகவும் பாதிக்கப்பட்டிருக்கிறார். அதனால்தானோ என்னவோ தீவிர மது பிரியராக மாறி வாழ்க்கையையே முடித்துக் கொண்டார்.

 

Published by
Rohini

Recent Posts