நான் வாழ்கையில செஞ்ச மிகப்பெரிய தப்பு அதுதான்!.. இப்படி பொசுக்குன்னு சொல்லிட்டாரே ரகுவரன்!..
திரையுலகில் அசத்தலான வில்லனாக வலம் வந்தவர் நடிகர் ரகுவரன். ஹீரோவாக நடிக்க துவங்கி, பின்னர் சின்ன சின்ன வேடங்களில் நடித்து ஒருகட்டத்தில் பயமுறுத்தும் வில்லனாக மாறியவர் ரகுவரன்.
உடல் மொழி, குரல், பேசும் ஸ்டைல் என அனைத்தின் மூலம் ரசிகர்மும் ரசிகர்களை கட்டிப்போட்டவர். குறிப்பாக பெரும்பாலான ரஜினி படங்களில் வில்லனாக வந்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவர். பாட்ஷா படத்தில் ஆண்டனியாக வந்து அதிரவிட்டவர்.
நடிகை ரோகிணியை இவர் காதல் திருமணம் செய்து கொண்டார். ஆனால், மனக்கசப்பு ஏற்பட்டு ரோகிணி ரகுவரனை பிரிந்தார். அதன்பின் ரகுவரன் தனிமையில் வாழ்ந்தார். சில படங்களில் நடித்தார். ஒரு நாள் தனிமையிலேயே இறந்தும் போனார்.
சினிமாவுக்கு வந்த புதிதிலும் சரி, பெரிய நடிகரான போதும் சரி எப்போதும் கெத்தாக வலம் வருபவர் ரகுவரன். கதைபிடித்தால் மட்டுமே நடிப்பார். இல்லையேல் எவ்வளவு பெரிய நடிகரென்றாலும் நடிக்க மாட்டார். இவரது ஸ்டைலில் நடிக்க எந்த நடிகரும் இதுவரை வரவில்லை.
ஆனால், நடிப்பின் மீது ஆர்வம் ஏற்பட்டு சினிமாவுக்கு வந்தாலும் ஒரு கட்டத்தில் நடிப்பின் மீது அவருக்கு ஆர்வம் இல்லாமல் போனது. உண்மையில் சினிமாவில் நடிப்பதே பிடிக்காமல் இருந்தவர்தான் ரகுவரன். இதை அவரே ஒரு பேட்டியில் கூறியுள்ளார். நான் வாழ்க்கையில் செய்த மிகப்பெரிய தவறே சினிமாவுக்கு வந்ததுதான். ஒரு விவசாய நிலம். அதில் விவசாயம் செய்து, அதை சந்தையில் விற்று, அந்த காசில் கஞ்சி குடிக்கணும்.
மழை எப்போது வரும், வெயில் எப்போது அடிக்கும் ஆண்டவா என பிரார்த்தனை செய்து கொண்டு, நாய், ஆடு, கோழி என வைத்துக்கொண்டு அதற்கெல்லாம் சாப்பாடு போட்டு சந்தோஷமாக இருக்க வேண்டும். அதுதான் வாழ்க்கை.. அதுதான் சந்தோஷம். நடிகனானதால் இவையெல்லாம் இழந்துவிட்டேன்’ என ரகுவரன் கூறியுள்ளார்
நாம் பெரிதாக பார்த்து வியக்கும் நடிகர்களுக்குள் இப்படியெல்லாம் நினைப்புகள் இருக்கும் போல!..
இதையும் படிங்க: நீ பேசாம பேங்க் வேலைக்கு போயிடு!.. லோகேஷ் கனகராஜை அசிங்கப்படுத்திய திரையுலகம்…