நடிகர் ரகுவரன் பின்னாடி சுற்றிய பெண்கள்....! அதுவும் எந்த மாதிரி அழகிகள் தெரியுமா...? நண்பர் சொன்ன பகீர்....
தமிழ் சினிமாவில் ஹீரோ ஹீரோயினுக்கு எவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறதோ அந்த அளவுக்கு வில்லன் கதாபாத்திரத்திற்கும் முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. அந்த காலங்களில் இருந்தே வில்லனுக்கென்று ஒரு மவுசு இருந்து கொண்டு தான் இருந்தது.
வில்லனாலே இவர்கள் தான் என்று சொல்லும் படியாக சில நடிகர்களே வாழ்ந்து வந்தனர். உதாரணமாக எம்.என். நம்பியார் அந்த காலங்களில் இவருக்கு இணை இவர் தான். அதே போல் இந்த காலகட்டத்தில் அப்படி இருந்தவர் நடிகர் ரகுவரன். நடிச்சா வில்லன் தான் என்றளவுக்கு தன்னுடைய நடிப்பால் அனைவரையும் மிரள வைத்தார்.
இவரை பற்றிய ஒரு அறியாத செய்தி இன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது. அதுவும் அவரது நண்பரும் நடிகருமான விச்சு விஸ்வநாதனே கூறியிருக்கிறார். இவரும் ரகுவரனும் கல்லூரி நண்பர்களாம். கல்லுரிக்கு வரும் போது செம ஸ்டைலாக வருவான். வரும் போது ஒரே ஒரு நோட்டை மட்டும் எடுத்துக் கொண்டு வருவான்.
கல்லூரிக்கு எதிரிலயே அவனுக்கு சொந்தமான ஹோட்டலும் இருக்கிறது. நேரே கல்லூரிக்கு போகாமல் அந்த ஹோட்டலுக்கு வந்து உட்கார்ந்து விடுவான் என்று கூறிய அவரது நண்பர் விச்சு ரகுவரன் பின்னாடி ஏகப்பட்ட பெண்கள் சுற்றிக் கொண்டு இருப்பார்கள். அந்த அளவுக்கு உயரமாக ஸ்டைலாக வருவான். மேலும் அந்த பெண்கள் எல்லாம் எம்.பி.ஏ பட்டதாரி பெண்களாக தான் இருப்பார்கள். இவன் முதலாமாண்டு மாணவனாக இருந்த சமயம். எல்லாம் மூத்த வயதுடைய பெண்களை தான் மயக்கியிருப்பான் என்று கூறினார்.