ரகுவரனை பளாரென அறைந்த நடிகை…படப்பிடிப்பில் நடந்த களோபரம்…காரணம் இதுதான்!…

Published on: October 6, 2022
---Advertisement---

தமிழ் சினிமாவின் டெரர் வில்லன் ரகுவரனை, தமிழ் நடிகை ஷூட்டிங் ஸ்பாட்டிங்கில் அறைந்த சம்பவம் குறித்த ஷாக்கிங் தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

1982ம் ஆண்டு ஏழாவது மனிதன் என்ற படத்தின் மூலம் கோலிவுட்டில் எண்ட்ரி கொடுத்தார். நிறைய தமிழ் படத்தில் நடித்தாலும் அவருக்கு பிற மொழிகளிலும் வாய்ப்பு கிடைத்தது. இதனால் பிஸி நாயகனாகவே வலம் வந்தார். ஒரு கட்டத்தில் ஹீரோவை விட அவரின் வில்லன் பாத்திரங்கள் ரசிகர்களிடம் அதிக வரவேற்பை பெற்றது. எப்போதும் தனது நடிப்பில் அதிக ஈடுபாடு கொண்டிருப்பவர் ரகுவரன். அப்படி இருக்கும் ரகுவரனை, நடிகை ஒருவர் படப்பிடிப்பில் அறைந்த தகவல் ஒன்று இணையத்தில் உலா வருகிறது.

1988ம் ஆண்டு வெளியான திரைப்படம் என் வழி தனி வழி. ரகுவரன் நாயகனாக நடித்திருந்த இப்படத்தினை வி. அழகப்பன் இயக்கினார். ஜோடியாக நிசாந்தி நடித்திருப்பார். ரகுவரனுக்கு அக்காவாக கீதா நடித்தார். இப்படத்தில் வக்கீலாக நடித்திருக்கும் ரகுவரன். நல்லவர்களுக்கு மட்டுமே வாதாடுவதாக கூறுவார். அதனால் அவருக்கு பெரிதாக கேஸ்கள் வராது. இதனால் மனம் உடைந்தவர். மது பழக்கத்திற்கு அடிமை ஆவார்.

இது அவரின் அக்காவான கீதாவிற்கு தெரிந்து விடும். ஒரு காட்சியில் அவரின் வீட்டு மொட்டை மாடியில் இதுகுறித்து இருவருக்கும் பேச்சு வார்த்தை நடக்கும். அப்போது கீதா, ரகுவரனை அடிக்க வேண்டும். அவரும் சினிமாவில் அடிப்பது போல சாதாரணமாகவே அடிப்பார். ஆனால் படத்தின் இயக்குனர் இதெல்லாம் சாதாரணமாக அடிக்க கூடாது. பளாரென அறையுங்கள் என்பாராம். இப்படியே காட்சி பல டேக்குகள் சென்றது. ஒரு கட்டத்தில் கீதா, நிஜமாகவே ரகுவரனை சிவக்கும் வண்ணம் அறைந்தாராம்.

நடிகை

இந்த காட்சியும் ஓகே ஆனதாம். அதன்பின், இதை நினைத்து கீதா வருந்தியிருக்கிறார். இயக்குனர் இதெல்லாம் படத்திற்காக தானே ஏன் வருத்தப்படுகிறீர்கள் என ஆறுதல் கூறினாராம். ஆனால் இதன் பின்னால் ஒரு காரணமும் இருக்கிறதாம்.

இதையும் படிங்க: கமல்ஹாசன் படங்களில் நடிக்க மறுத்த ரகுவரன்… பயில்வான் சொன்ன அதிர்ச்சி தகவல்..

அந்த படத்திற்கு ரகுவரனால் நிறைய கால்ஷூட் பிரச்சனை ஏற்பட்டதாம். இதனை மனதில் வைத்திருந்த இயக்குனர் கீதாவை வைத்து அடித்து பழி தீர்த்து கொண்டிருக்கிறார். தொடர்ந்து, அடிக்க வலியுறுத்தியதும் அதற்காக தானாம். ஆனால், இதுகுறித்து ரகுவரன் பெரிதாக வருந்தவில்லையாம். என் படம், அதிலும் அவர் எனக்கு அக்கா. அவர் என்னை அடிப்பதில் தவறில்லை என்றே கடந்து சென்று இருக்கிறார். என்ன மனுஷனய்யா!

Akhilan

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.