நடிகர் ரகுவரன் கிட்டத்தட்ட 300க்கும் மேற்பட்ட படங்களில் வில்லனாகவும், துணை நடிகராகவும் நடித்துள்ளார். இன்று வரை இவரை போன்ற ஒரு வில்லன் இல்லை என்றே கூறலாம். தமிழ் மட்டுமின்றி மலையாளம், தெலுங்கு , இந்தி ஆகிய மொழிகளில் இவர் நடித்துள்ளார்.
பாட்ஷா, மனிதன், முதல்வன், ரட்சகன், யாரடி நீ மோகினி, அஞ்சலி, புரியாத புதிர் உள்ளிட்ட படங்களில் இவரின் நடிப்பை பார்த்து நாம் வியந்திருப்போம். முதல்வன் படத்திற்காக தேசிய விருது பெற்றுள்ளார். தமிழ் சினிமாவுக்கு இவரை போன்ற ஒரு நடிகர் கிடைப்பது அரிது தான்.
இதையும் படிங்க- ரகுவரன் லைஃப்ல மிஸ் பண்ணது! தனுஷ் மூலமாக நிறைவேற்றி ஆறுதலடைந்த சம்பவம்
இவரின் கம்பீரக் குரல், ஸ்டைல், மிரட்டலான நடிப்பு என எல்லாவற்றையும் தமிழ் சினிமா மிஸ் செய்துகொண்டிருக்கிறது. இவர் இறந்து 15 ஆண்டுகள் ஆக போகிறது. ஆனால் இன்று வரை நாம் இவரை பற்றி பேசிக்கொண்டு தான் இருக்கிறோம். சமீபத்தில் நடைபெற்ற ஜெயிலர் ஆடியோ லாஞ்ச் விழாவில் கூட, ரஜனிகாந்த் பேசியிருந்தார்.
எனக்கு இரண்டே வில்லன் தான், ஒன்று ஆண்டனி, மற்றொன்று நீலாம்பரி என்று. பாட்ஷா படத்தில் ஆண்டனியை யாராவது மறக்க தான் முடியுமா? அப்படி பட்ட நடிகர், உடல்நலக்குறைவால் கடந்த 2008ம் ஆண்டு, மார்ச் மாதம் 19ம் தேதி காலமானார். அவரின் கடைசி ஆசை நிறைவேறவே இல்லை என்று நடிகர் ரகுவரனின் தாயார் சமீபத்திய பேட்டி ஒன்றில் கண்கலங்க பேசியுள்ளார்.
அந்த பேட்டியில், ரகுவரன் தன் மகனை பிரிந்து இருக்க முடியாமல் உடைந்து போய்விட்டார். நடிகை ரோகினியை திருமணம் செய்துகொண்டார் ரகுவரன். இவர்களுக்கு ரிஷி என்ற மகன் உள்ளார். இந்த தம்பதியினர் 2006ம் ஆண்டு விவாகரத்து செய்து பிரிந்துவிட்டனர்.
அதன் பின்னர் தன் மகனுடன் சேர்ந்து வாழ முடியாமல், மிகுந்த மன உளைச்சலில் ரகுவரன் இருந்ததாகவும், அதனால் தான் மனமுடைந்திருந்தார். அவரின் கடைசி ஆசை தன் மகனோடு நேரம் செலவிடுவதாக தான் இருக்கும். ஆனால் அது நடக்கவில்லை என்று ரகுவரனின் தாயார் அந்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க- குடிக்கு அடிமையாகி குட்டிச்சுவரா போன ரகுவரன்! மதுவுக்கு அடிக்ட் ஆனதே இதனால்தான் – சகோதரர் பரபரப்பு பேட்டி
இயக்குனர் அட்லீ…
Vijay antony:…
தமிழ் சினிமாவில்…
ரஹ்மான் மற்றும்…
நடிகர் சிம்பு…