Rajini: தமிழ் மட்டுமில்லாமல் உலகளவில் புகழ்பெற்ற இசையமைப்பாளர் ஏஆர் ரஹ்மான். இரட்டை ஆஸ்கார் விருதை வென்ற முதல் இந்தியர் என்ற பெருமைக்கு சொந்தக்காரர் ஏஆர் ரஹ்மான். ரோஜா படத்தின் மூலம் தன் இசைப்பயணத்தை ஆரம்பித்த ஏஆர் ரஹ்மான் இளைஞர்கள் பல பேரின் காதலுக்கு உறுதுணையாக இருந்திருக்கிறார். இவர் இசையில் அமைந்த பாடல்கள் மூலமாகவே சில பேர் காதல் வயப்பட்டிருக்கிறார்கள்.
காதலிக்காதவர்கள் கூட காதலித்துவிடுவார்கள். அதுவரை இசைஞானியின் இசையையே கேட்டு ரசித்து வந்தவர்களுக்கு ரஹ்மானின் இசை புத்துணர்ச்சியாகவும் புதுமையாகவும் இருந்தது. ரோஜா படத்திற்கு பிறகு ஒரு பக்கம் இளையராஜா இன்னொரு பக்கம் ரஹ்மான் என போட்டிப் போட்டுக் கொண்டு பாடல்களை கொடுத்து வந்தனர். சொல்லப்போனால் இளையராஜாவிடம் கீபோர்டு பிளேயராக இருந்தவர்தான் ரஹ்மான்.
ஹாலிவுட், பாலிவுட் என உலகத்தரம் வாய்ந்த இசையை வழங்கியிருக்கிறார். இந்த நிலையில் மணிரத்னம் இயக்கத்தில் துல்கர் சல்மான் மற்றும் நித்யா மேனன் நடிப்பில் வெளியான படம் ஓகே கண்மணி. இந்தப் படம் வெளியான போது அப்போதைய இளைஞர்களுக்கு ஒரு புதுமையான அனுபவத்தை கொடுத்தது. இந்தப் படத்திற்கு பிறகுதான் லிவிங் டுகெதர் என்ற கான்செப்ட் பரவலாக பேசப்பட்டது.
இந்தப் படத்தில் அமைந்த அனைத்து பாடல்களும் சூப்பர் டூப்பட் ஹிட். ஆல்பம் ஹிட்டாக மாறியது. படத்திற்கு ஏஆர் ரஹ்மான் தான் இசை. இந்தப் படத்தில் நானே வருகிறேன் என்ற ஒரு காதல் மெலோடி சாங் இருக்கிறது. மிகவும் ஹிட்டான பாடல். ஆனால் இந்த பாடலை முதலில் ரஜினியின் லிங்கா படத்திற்காகத்தான் கம்போஸ் செய்து வைத்திருந்தாராம் ரஹ்மான் .

ஆனால் ஏதோ காரணத்தினால் லிங்கா படத்தில் வைக்க முடியவில்லை. மணிரத்னத்திடம் இந்த பாடலை போட்டுக் காண்பித்தவுடன் மெலோடி பாடல்தான் வேண்டும் என்று சொன்னாராம். இது மெலோடிதான் என்று ரஹ்மான் சொன்ன பிறகுதான் ஒகே கண்மணி படத்தில் இந்தப் பாடலை வைத்திருக்கிறார்கள்.