
Cinema News
அய்யோ அவரு பயங்கரமான சவுண்டு பார்ட் ஆச்சே!.. பாவம் நம்ம வாயில்லா பூச்சி வான்டட்டா சிக்கப் போகுதா?..
சித்திரம் பேசுதடி திரைப்படம் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் மிஷ்கின். தமிழ் சினிமாவில் வித்தியாசமான கதை சொல்லியாக வலம் வருபவர். காட்சிகளை வித்தியாசமான கோணங்களில் காண்பித்து ரசிகர்களுக்கு புதிய அனுபவத்தை கொடுப்பவர் இவர். அஞ்சாதே, நந்தலாலா, யுத்தம் செய், ஓநாயும் ஆட்டுக்குட்டியும், முகமுடி, சைக்கோ, பிசாசு, துப்பறிவாளன் ஆகிய திரைப்படங்களை இயக்கினார்.
மேலும், சவரக்கத்தி, சூப்பர் டீலக்ஸ், மாவீரன் ஆகிய படங்களில் நடித்துள்ளார். விஜய் நடிப்பில் இப்போது உருவாகி வரும் லியோ படத்தில் நடித்துள்ளார். மிஷ்கினை பொறுத்தவரை திரையுலகில் அவர் மீது சில குற்றச்சாட்டுகள் உண்டு. அதிகமாக பேசி சாவடிப்பார் என்பதுதான் அந்த புகார். சினிமா விழாக்களில் மிஷ்கின் பேசும் ஸ்டைலை பார்த்தலே நமக்கு அது புரியும்.
இதையும் படிங்க: சேரனோட சரக்கு போட்டு செம டேன்ஸு!.. இவ்வளவு ஓப்பனாவா சொல்லுவாரு மிஷ்கின்!…
சில சமயம் மேடைகளில் வரம்பு மீறியும், முகம் சுளிக்கும்படியும் கூட பேசிவிடுவார். விஜய், விஜய் சேதுபதி, சிவகார்த்திகேயன் எந்த நடிகர் என்றாலும் சரி மிஷ்கினை பொறுத்தவரை ‘அவன்’ என்றுதான் பேசுவார். ஊடகங்களில் பேட்டி கொடுத்தாலும் அப்படித்தான். சென்சார் செய்யாமல் மனதில் நினைத்ததை அப்படியே பேசுவார். இதனால் இவரை சிலர் விமர்சிப்பதும் உண்டு.
ஆனால், மிஷ்கின் தன்னை மாற்றிக்கொள்ளவே இல்லை. அதோடு, இவருக்கு கொஞ்சம் இசை தெரியும் என்பதால் இசையமைப்பாளர்களிடம் முரண்படுவார். கோபக்காரரான இளையாராஜவே இவரிடம் மாட்டிக்கொண்டு முழித்தார். பிசாசு 2 படம் இயக்கிய போது கார்த்திக் ராஜா பாதி என்றால் மீதி இசையை மிஷ்கினே செய்துவிட்டார்.
இதையும் படிங்க: கொளுத்திப் போட்ட தீ பத்திக்கிட்டு எரியுது! பொட்டியை தூக்கிட்டு பறந்த மிஷ்கின் – ஆடிய ஆட்டமெல்லாம் என்னாச்சு?
மீண்டும் இவர் இளையராஜாவையோ அல்லது கார்த்திக் ராஜாவையோ தேடிப்போனால் கண்டிப்பாக சம்மதம் சொல்ல மாட்டார்கள். இந்த நிலையில் இவரிடம் இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் சிக்கியுள்ளார். பிசாசு 2 படத்திற்கு பின் கலைப்புலி எஸ்.தாணு இயக்கத்தில் விஜய் சேதுபதியை வைத்து ஒரு புதிய படத்தை இயக்கவுள்ளார் மிஷ்கின்.
இந்த படத்திற்குதான் ரகுமான் இசையமைக்கவுள்ளார் என சொல்லப்படுகிறது. டெரரான இளையாராஜவே மிஷ்கினிடம் அலறியபோது, ரகுமானோ மிகவும் மென்மையானவர். அதிர்ந்து கூட பேசமாட்டார். மிஷ்கினிடம் இவர் சிக்கினால் என்னவாகுமோ என திரையுலகினர் பேசி சிரிக்கிறார்கள்.
இதையும் படிங்க: கமலுக்கும் இவருக்கும் இப்படி ஒரு பஞ்சாயத்து நடந்திருக்கா? அதான் படம் டிராப்பா? மிஷ்கின் சொன்ன சீக்ரெட்