விஜய் கட்சி ஆரம்பிக்க காரணமே அவர்தானாம்!.. சீக்ரெட்டை லீக் செய்த பிரபலம்...
Vijay: அப்பா எஸ்.ஏ.சந்திரசேகர் மூலம் தமிழ் சினிமாவில் நடிக்க துவங்கியவர் விஜய். துவக்கத்தில் இவரும் பல அவமானங்களையும், தோல்விகளையும் சந்தித்திருக்கிறார். ஆனாலும், திறமைய வளர்த்துக்கொண்டு தொடர்ந்து திரைப்படங்களில் நடித்து தனக்கென ரசிகர் கூட்டத்தையே உருவாக்கினார்.
இவரின் நடிப்பில் வெளியான பூவே உனக்காக, காதலுக்கு மரியாதை போன்ற படங்கள் இவருக்கு ரசிகர்களை பெற்று தந்தது. அதன்பின் வசூலை குவிக்கும் ஒரு நடிகராக மாறினார். இப்போது தமிழ் சினிமாவில் அதிக சம்பளம் வாங்கும் நடிகராக மாறி இருக்கிறார். ஆனால், இன்னும் ஒரு படத்தில் மட்டுமே நடிப்பேன் எனவும், அதன்பின் முழுக்க முழுக்க அரசியலில் இறங்கப்போவதாகவும் சொல்லி இருக்கிறார்.
இதையும் படிங்க: மீண்டும் டைரக்ஷனில் களமிறங்கும் தனுஷ்… ஆனா இது நடக்கிறதுக்கான காரணமே வேறயாம்…
தமிழக வெற்றிக் கழகம் என்கிற ஒரு கட்சியை துவங்கி சமீபத்தில் அவரின் கட்சி கொடி மற்றும் பாடலை அறிமுகம் செய்து வைத்தார். கட்சிக்கான அடித்தள பணிகள் இப்போது நடைபெற்று வருகிறது. வருகிற 2026 சட்டமன்ற தேர்தலில் தனது கட்சி களமிறங்கும் எனவும் அவர் அறிவித்திருக்கிறார்.
விரைவில் கட்சி மாநாடும் நடக்கவிருக்கிறது. அதில் தனது கட்சியின் கொள்கை உள்ளிட்ட பல விஷயங்களை அவர் பேசவிருக்கிறார். எனவே, அந்த மாநாடு எப்போது எங்கு நடக்கும்?.. அதில் எத்தனை பேர் கலந்து கொள்ளவிருக்கிறார்கள்?. விஜய் என்ன பேசப்போகிறார்? என தெரிந்துகொள்ள ரசிகர்கள் மட்டுமில்லாமல் அரசியல்வாதிகளும் ஆவலுடன் காத்திருக்கிறார்கள்.
இந்நிலையில், காங்கிரஸ் கட்சியின் முன்னாள் எம்.எல்.ஏ-வான பவதாரிணி ஊடகம் ஒன்றில் பேசியபோது ‘விஜய் இப்போது அரசியலுக்கு வர காரணமே ராஜிவ் காந்திதான். ஒருமுறை ராகுலை சந்தித்து பேசிய விஜய் காங்கிரஸ் கட்சியில் தான் இணைய விரும்புவதாக தெரித்து கட்சியில் ஒரு முக்கிய பொறுப்பு கேட்டார்’.
ஆனால், ராகுலோ ‘நீங்கள் ஒரு பெரிய ஸ்டார். உங்களுக்கு பின்னால் ஒரு பெரிய ரசிகர் கூட்டம் இருக்கிறது. நீங்கள் ஏன் காங்கிரஸில் ஒரு பொறுப்பில் இருக்க வேண்டும்?.. நீங்களே ஒரு கட்சியை துவங்கலாமே’ என ஐடியா கொடுத்தார். விஜய் இப்போது அதைத்தான் செய்து காட்டியிருக்கிறார். ஆனால், அவரின் கொள்கை என்ன?.. அரசியலில் எப்படி தாக்கு பிடிப்பார்? என்பதையெல்லாம் பார்த்துவிட்டுதான் அவர் அரசியலுக்கு எப்படி செட் ஆவார் என்பதை சொல்ல முடியும்’ என அவர் கூறினார்.
இதையும் படிங்க: கட்சிக் கொடி அறிமுக விழாவில் குடும்பத்தை அழைக்காத விஜய்! இதுதான் காரணமா?