ஒரு நிமிஷம் தலையே சுத்திருச்சு! இப்படியாம்மா டிரெஸ் போடுவ ரகுல்ப்ரீத்சிங்?
கில்லி என்ற கன்னட திரைப்படத்தில் 2009ம் ஆண்டு அறிமுகமானார். அதையடுத்து தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் நடிக்க ஆரம்பித்தார். அருண் விஜய் நடித்த ‘தடையற தாக்க’படம் மூலம் அறிமுகமானவர் ரகுல் ப்ரீத் சிங். ‘என்னமோ ஏதோ’ என்கிற படத்தில் கவுதம் கார்த்திக்கு ஜோடியாக நடித்தார்.
குறிப்பாக தெலுங்கு சினிமாவில் பல்வேறு திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்து அங்கு டாப் ஹீரோயினாக வலம் வந்துக்கொண்டிருக்கிறார். இதனிடையே போதைப்பொருள் கடத்தல் உள்ளிட்ட விவகாரங்களில் சிக்கி விமர்சனத்திற்குள்ளானார்.
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கிய ஸ்பைடர் படம் மூலம் தமிழில் மீண்டும் நடித்தார். மகேஷ்பாபு நடித்த அப்படம் தோல்வியை தழுவியது. அடுத்து, கார்த்தி நடித்த ‘தீரன் அதிகாரம் ஒன்று’ படத்தில் நடித்தார். அது என்னவோ அவர் நடிக்கும் படங்கள் தமிழில் பெரிய ஹிட் ஆகவில்லை.
இந்நிலையில் தற்போது கவர்ச்சியான கிளாமர் உடையில் அழகான போஸ் கொடுத்து சமூகவலைதளவாசிகளின் கவனத்தை ஈர்த்துள்ளார். அம்மணியின் இந்த போஸுக்கு இன்ஸ்டாவாசிகள் லைக்ஸ் குவித்துள்ளனர்.