Cinema News
ஒரே பாட்டில் இந்தியாவை தன் வசப்படுத்திய ஏ.ஆர். ரகுமான்.. தி ட்ரெண்ட் செட்டர்..
ரகுமான் 1966 ஜனவரி 6 ஆம் தேதி தமிழ்நாட்டில் சென்னையில் பிறந்தவர். அருணாச்சலம் சேகர் திலீப் குமார் என்பது இவரது இயற்பெயர் ஆகும். இசையுலகப் பயணத்தை 1985 இல் ஆரம்பித்தார். இவரின் குடும்பம் இசை சார்ந்தது. இவரின் தந்தை ஆர். கே. சேகர் மலையாளத் திரைப்படத்துறையில் பணியாற்றியவர்.11 வயதில் இளையராஜா இசைக்குழுவில் கீபோர்டு வாசிப்பதற்காகச் சேர்ந்தார். பின்னர் எம். எஸ். விஸ்வநாதன், ரமேஷ் நாயுடு, ஜாகீர் உசேன் மற்றும் குன்னக்குடி வைத்தியநாதன் உள்ளிட்ட பல இசையமைப்பாளர்களிடம் பணியாற்றினார்.
இந்தி , ஆங்கிலம் போன்ற பல மொழித் திரைப்படங்களுக்கு இசையமைத்த இவர் இசைப்புயல் என அழைக்கப்படுகிறார். ஆஸ்கார் விருது, கோல்டன் குளோப் விருது , பாஃப்டா விருது , தேசியத் திரைப்பட விருது போன்ற புகழ் பெற்ற விருதுகளைப் பெற்றவர். இவருக்கு 2010-ஆம் ஆண்டில் இந்திய அரசின் பத்ம பூசண் விருது அளிக்கப்பட்டது. இவர் ஆசியாவின் மொசார்ட் என்றும் அழைக்கப்படுகிறார்.ஹாலிவுட் திரைப்படமான ஸ்லம் டாக் மில்லியனியர் என்ற ஆங்கிலத் திரைப்படத்திற்கு இசையமைத்தமைக்காக 2ஆஸ்கார் விருதுகளை வென்றிருக்கிறார்.
1992 ஆண்டு வெளியான மணிரத்தினத்தின் ரோஜா திரைப்படம், இவருடைய வாழ்க்கையில் திருப்புமுனையாக அமைந்தது. இப்படத்தின் பாடல்கள் அனைத்தும் பிரபலமாயின. இவருக்கு முதல் தேசியவிருது வாங்கித் தந்தது. பின்னர் 1997 இல் மின்சாரக் கனவும், 2002 லகான் இந்தி படமும், 2003-இல் கன்னத்தில் முத்தமிட்டால் படமும் இவருக்குத் தேசிய விருதுகள் வாங்கித் தந்தன.1991 ஒன்று வரை இந்திய சினிமாவில் இசையமைப்பு ஒரே மாதிரியாக அமைந்திருந்தது 1992 இல் ரஹ்மானின் முதல் படமான ரோஜா வெளிவந்த பிறகு இந்திய சினிமாவின் இசையில் புரட்சியை ஏற்படுத்தினார்.
இசையின் துல்லியத்தையும் மேம்படுத்தினார். 1992 இல் ரோஜா படத்தில் ரஹ்மான் ஏற்படுத்திய இசையின் அமைப்பு ஒட்டுமொத்த இந்தியாவின் பார்வையை தமிழ்நாட்டின் மீது திருப்பினார்,
மேலும் முதல் முறையாக தமிழில் இருந்து இந்திக்கு மொழிபெயர்க்கப்பட்ட ரோஜா படத்தின் பாடல்கள் அதன் கேசட்டுகள் 2.8 மில்லியன் அளவிற்கு விட்டுத் தீர்ந்து சாதனை படைத்தது. டிரெண்ட் செட்டராக விளங்கினார். இப்படி தன் முதல் படத்திலே தன் திறமையின் மூலம் சிகரத்தை அடைந்த சாதனைத் தமிழன் ஏ.ஆர். ரகுமான்.