இளையராஜா ஆபிசுக்கு திடீர் ரெய்டு.! 5000 ரூபாய் 'கொரோனா' அபராதம் வசூலித்த அதிகாரிகள்.!
தற்போது கொரோனா பாதிப்புகள் அதிகரித்து வருவதால் தமிழக அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது. அப்படி இருந்தும் பொங்கல் தின கொண்டாட்டங்கள், அதற்கான கடைவீதி பர்ச்சேஸ் என கடந்த இரு நாட்களாக சமூக இடைவெளி கிலோ என்ன விலை என கேட்கும் அளவிற்கு தான் இருந்து வருகிறது.
இருந்தாலும், அரசு கடும் கட்டுப்பாடுகளை விதித்து தான் வருகிறது. முகக்கவசம் அணியாமல் இருந்தால், அதற்கான அபராதம் 200 இல் இருந்து 500 ரூபாயாக அதிகரித்து உத்தரவு வந்துள்ளது. இரவு நேர ஊரடங்கு, ஞாயிறு முழு ஊரடங்கு, 50 சதவீத பார்வையாளர்கள், பணியாளர்கள், கஸ்டமர்களுக்கு மட்டுமே அனுமதி என கட்டுப்பாடு உத்தரவு பறக்கிறது.
அங்கங்கே சுகாதாரத்துறை அதிகாரிகள் திடீர் ரெய்டுகளை நடத்தியும் வருகின்றனர். அப்படி, இளையராஜாவின் இசைப்பதிவு அலுவலத்திற்கும் வந்துள்ளனர். வந்து, பார்த்தபோது,
அந்த இசைப்பதிவு அலுவலகத்தில் 10 பேருக்கு அதிகமானோர் இருந்ததாக கூறப்படுகிறது. அதனால் அந்த அலுவலகத்திற்கு 5000 ரூபாய் அபராதம் விதித்துள்ளனர்.