Connect with us

Cinema History

ரயிலை மையமாகக் கொண்டு பட்டையைக் கிளப்பிய தமிழ்ப்படங்கள்

தமிழ்சினிமாக்கள் ரயிலை மையமாகக் கொண்டு பல படங்கள் வந்துள்ளன. படம் முழுக்க ரெயிலையே வைத்து எடுத்து இருக்கும்போது நமக்கு ஒரு பரவச உணர்வு ஏற்படும்.

ஓடும் ரெயிலில் பயணம் செய்வது என்றால் குழந்தை குட்டிகளுடன் குடும்பம் குடும்பமாக பயணம் செய்ய ஆர்வத்துடன் கிளம்புவதுண்டு. ரெயிலில் சகல வசதிகளும் இருப்பதால் பெரும்பாலானோர் இதில் தான் பயணம் செய்வார்கள். அப்போது அங்கு ஒரு ரெயில் சிநேகம் உருவாகும்.

அவர்களிடம் தனது வாழ்க்கையில் கடந்து வந்த பாதைகளை மெய்மறக்கச் சொல்லிக் கொண்டு இருப்போம். தமிழ்சினிமாவிலும் இதுபோன்ற அம்சங்களுடன் கதைகள் வெளியாகி உள்ளன. அப்படிப்பட்ட ரெயில் படங்களில் ஒரு சிலவற்றை இப்போது பார்க்கலாம்.

இரயிலுக்கு நேரமாச்சு

பாரதிமோகனின் இயக்கத்தில் 1988ல் வெளியான படம் இரயிலுக்கு நேரமாச்சு. எஸ்.ஏ.ராஜ்குமாரின் இசையில் பாடல்கள் அனைத்தும் பட்டையைக் கிளப்பின.

ராமராஜன், நிஷாந்தி, வினுசக்கரவர்த்தி, மாதுரி உள்பட பலர் நடித்துள்ளனர். போறவளே, ராஜ ராகம், ஆத்தா, தேவியர், ஆத்தங்கரை, ஏலமலை காத்து ஆகிய பாடல்கள் இப்படத்தில் இடம்பெற்றுள்ளன.

கிழக்கே போகும் ரெயில்

kilakke pogum rail suthakar , rathika

1978ல் வெளியான படம். இயக்குனர் இமயம் பாரதிராஜா இயக்கியுள்ளார். இசைஞானி இளையராஜாவின் இசையில் பாடல்கள் அனைத்தும் பட்டி தொட்டி எங்கும் பட்டையைக் கிளப்பின. சுதாகர், ராதிகா, விஜயன், காந்திமதி, ஜனகராஜ் உள்பட பலர் நடித்துள்ளனர்.

படத்தின் கதையும், ரம்மியமான கிராமப்புறங்களின் அழகும், மெல்லிய காதலும் படத்தோடு நம்மை ஒட்ட வைக்கின்றன. கோயில் மணியோசை, மாஞ்சோலைக் கிளிதானோ, பூவரசம்பூ பூத்தாச்சு, மலர்களே ஆகிய பாடல்கள் இப்படத்தில் இடம்பெற்றுள்ளன.

ரெயில் பயணங்களில்

rail payanangalil

1981ல் வெளியான இந்தப்படத்தை டி.ராஜேந்தர் இயக்கியுள்ளார். ஸ்ரீநாத், ஜோதி, ராஜீவ், சிவரஞ்சனி, மாஸ்டர் ஆனந்த், இடிச்சபுளி செல்வராஜ், திலீப் இவர்களுடன் டி.ராஜேந்தர் கவுரவ தோற்றத்தில் நடித்துள்ளார்.

வசந்தம் பாடி வர, அட யாரோ, வசந்த காலங்கள், நூலுமில்லை, அமைதிக்குப் பெயர் தான் சாந்தி ஆகிய கவித்துவமான பாடல்கள் நிறைந்தது. அந்தக்காலத்தில் இந்தப்பாடல்களை முணுமுணுக்காத இளைஞர்களே இல்லை எனலாம். கல்லூரி மாணவர்களுக்கு இந்தப்படம் ஒரு விருந்து.

தொடரி

2016ல் வெளியான இந்தப்படத்தை பிரபு சாலமன் இயக்கினார். தனுஷ், கீர்த்தி சுரேஷ், தம்பி ராமையா, கருணாகரன், ராதாரவி, ஆர்.வி.உதயகுமார், போஸ் வெங்கட், பட்டிமன்றம் ராஜா, ஞானசம்பந்தன் உள்பட பலர் நடித்துள்ளனர். இமான் இசை அமைத்துள்ளார். இந்தப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது.
அடடா இது என்ன, ஊரெல்லாம் கேக்குதே, மனுசனும் மனுசனும், போன உசுரு, லவ் இன் வீல்சு ஆகிய பாடல்கள் இப்படத்தில் இடம்பெற்றுள்ளன.

ஜிகு ஜிகு ரெயில்

மணிவண்ணன் 1986ல் இந்தப்படத்தை இயக்கியுள்ளார். எஸ்.வி.சேகர், ஜீவிதா உள்பட பலர் நடித்துள்ளனர். சங்கர் கணேஷ் இசை அமைத்துள்ளார். சொல்லாதே யாருக்கும், பூலோகமே ரொம்ப, நூறு நொடிகள், மாமன்னு ஆகிய பாடல்கள் இந்தப்படத்தில் இடம்பெற்றுள்ளன.

google news
Continue Reading

More in Cinema History

To Top