இப்படி ஒரு போட்டோவை பதிவிட்டு ரசிகர்களை வாயடைக்கவைத்த ரைசா!
தமிழ்நாட்டில் பிறந்து பின் பெங்களூருவில் வளர்ந்து மாடலிங் துரையின் மூலமாக சினிமாவில் நுழைந்தவர் நடிகை ரைசா வில்சன். நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிவரும் பிக்பாஸ் முதல் சீசனில் அறிமுகமாகி மக்களுக்கு பரிச்சயமானவர் நடிகை ரைசா.
பிக்பாஸ் வீட்டிலேயே தனது கவர்ச்சியால் ரசிகர்களை கவர்ந்திழுத்தார். அதன்பின்னர் தனுஷ் நடித்த வேலையில்லா பட்டதாரி 2 படத்தில் கஜோலுக்கு உதவியாளராக சிறிய வேடத்தில் நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அதன்பின்னர் யுவன் ஷங்கர் ராஜா தயாரிப்பில் ஹரிஷ் கல்யாணுடன் இணைந்து 'பியர் பிரேமா காதல்' என்ற படத்தில் நாயகியாக நடித்தார்.
இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இதன்பின் அதிகமாக வாய்ப்பு வரும் என்று நினைத்தவருக்கு ஏமாற்றமே மிஞ்சியது. பின்னர் துருவ் விக்ரம் நடித்த வர்மா படத்தில் சிறிய வேடத்தில் நடித்தார். ஆனால், இப்படம் வெளியாகவே இல்லை.
சமீபத்தில் ஒரு அழகுசாதன பொருளை பயன்படுத்தியதால் முகம் அலங்கோலமானது என புகார் கொடுத்து பரபரப்பை ஏற்படுத்தினார். இப்போது எல்லா பிரச்சனைகளும் முடிந்து பழைய நிலைக்கு திரும்பியுள்ளதால், சமூக வலைத்தளங்களில் தனது புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார். அந்தவகையில் தற்போது மிகவும் க்யூட்டாக இருக்கும் ஒரு புகைப்படத்தை இன்ஸ்ட்டாவில் பதிவிட்டுள்ளார்.
இதை பார்த்து ரசிகர்கள், நீங்கள் இம்புட்டு அழகா என கமெண்டில் வலிந்து வருகின்றனர்.