எப்படி வேணா பார்த்துக்கோ!.. இஷ்டத்துக்கு காட்டி ஏங்க வைக்கும் பியார் பிரேமா காதல் ஹீரோயின்!..

Published on: April 23, 2024
---Advertisement---

சௌந்தர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் தனுஷ், அமலா பால், கஜோல் நடிப்பில் வெளியான வேலையில்லா பட்டதாரி 2 திரைப்படத்தில் சாதாரண கதாபாத்திரத்தில் நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் தான் ரைசா வில்சன்.

பிக் பாஸ் சீசன் 1 நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்ற ரைசா வில்சன் அந்த சீசனில் கலந்து கொண்ட ஹரிஷ் கல்யாண் உடன் ரொம்பவே நெருங்கி பழகி வந்தார். பிக்பாஸ் நிகழ்ச்சி முடிந்ததும் யுவன் சங்கர் ராஜா தயாரிப்பில் இளன் இயக்கத்தில் இருவரும் இணைந்து பியார் பிரேமா காதல் படத்தில் நடித்திருந்தனர்.

இதையும் படிங்க: குடிச்சிட்டு தாலியை கழட்டி எறிந்த மிருணாளினி ரவி!.. வீடியோவை பார்க்கும் போதே பகீர்னு ஆகுதே!..

அந்த படம் மிகப்பெரிய வெற்றி படமாக மாறியது. அடுத்து ஹரிஷ் கல்யாண் நடித்த தனுசு ராசி நேயர்களே படத்திலும் இருவரும் இணைந்து நடித்தனர். பாலா இயக்கத்தில் சியான் விக்ரமின் மகன் துருவ் விக்ரம் நடித்த வர்மா படத்தில் படத்துக்குள் வரும் ஹீரோயின் கதாபாத்திரத்தில் ரைசா வில்சன் நடித்திருந்தார்.

அதன் பின்னர் விஷ்ணு விஷால் நடிப்பில் வெளியான எஃப்ஐஆர் படத்தில் போலீஸ் அதிகாரியாக நடித்து மாஸ் காட்டிய ரைசா வில்சன் பிரபுதேவாவுடன் இணைந்து பொய்க்கால் குதிரை படத்திலும் நடித்தார். சுந்தர் சி இயக்கத்தில் வெளியான காபி வித் காதல் படத்தில் ஸ்ரீகாந்த்துக்கு ஜோடியாக நடித்திருந்தார். கடந்த ஆண்டு வெளியான கருங்காப்பியம் படத்திலும் நடித்த ரைசா வில்சன் அடுத்ததாக ஜிவி பிரகாஷ் உடன் இணைந்து காதலிக்க யாருமில்லை படத்தில் நடித்து வருகிறார்.

இதையும் படிங்க: பாலசந்தரிடம் ரஜினியை மாட்டி விட்ட நடிகை! அதுக்கு குடிக்கிற காப்பியில் இதையா கலக்குறது?

இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தொடர்ந்து கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வரும் ரைசா வில்சனுக்கு சோசியல் மீடியாவில் ஏகப்பட்ட ரசிகர்கள் உள்ளனர். இன்ஸ்டாகிராமில் இவரை சுமார் 16 லட்சம் பேர் பின் தொடர்கின்றனர். இந்நிலையில் லைட் க்ரீன் கலரில் கவர்ச்சி உடையை அணிந்துக் கொண்டு வித விதமாக போஸ் கொடுத்த போட்டோக்களை வெளியிட்டுள்ளார்.

அந்த போட்டோக்களை பார்த்து ஏகப்பட்ட நெட்டிசன்கள் ஏடாகூடமாக கமெண்ட்டுகளை பதிவிட்டு வருகின்றனர். 35 வயதானாலும் இன்னமும் இளம் நடிகை போல இருக்கீங்களே ரைசா அந்த ரகசியம் எப்படி என கேட்டு வருகின்றனர்.

இதையும் படிங்க: முதல் படத்திலே நயன் அப்படி… நான்லாம் பதறிட்டேன்… ஓபனாக சொன்ன இயக்குனர் ஹரி!

Saranya M

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.