லிவிங் டூ கெதர் எனக்கு ஓகே தான்... பிக்பாஸ் நடிகை ஓபன் டாக்.....
ஏராளமான இளம் நடிகர் மற்றும் நடிகைகள் ரசிகர்கள் மத்தியில் பிரபலமாவதற்கு கையில் எடுக்கும் ஆயுதம் பிக்பாஸ் நிகழ்ச்சி. விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் இந்த ரியாலிட்டி ஷோவில் பங்கேற்பதன் மூலம் தினமும் மக்கள் தங்களை டிவியில் பார்ப்பதால் எளிதில் பிரபலமாகி விடலாம் என்பதால் பலர் இந்த நிகழ்ச்சியை தேர்வு செய்கிறார்கள்.
அந்த வகையில் பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் சீசனில் போட்டியாளராக பங்கேற்றவர் தான் நடிகை ரைசா வில்சன். முன்னதாக மாடலிங் துறையில் இருந்த ரைசா தனுஷ் நடிப்பில் வெளியான வேலையில்லா பட்டதாரி இரண்டாம் பாகத்தில் சிறு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
பின்னர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற பிறகு நடிகர் ஹரீஷ் கல்யாணுடன் இணைந்து பியார் பிரேமா காதல் என்ற படம் மூலம் நாயகியாக அறிமுகமானார். இப்படம் இவருக்கு நல்ல அறிமுகமாக அமைந்தது. ஆனால் இப்படத்திற்கு பிறகு இவருக்கு எந்த படமும் தற்போது வரை வெளியாகவில்லை.
இருப்பினும் கைவசம் ஏராளமான படங்களை வைத்துள்ளார் ரைசா. அந்த வகையில் ஜி.வி.பிரகாஷுடன் காதலிக்க யாருமில்லை, நடிகர் விஷ்ணு விஷாலுடன் எஃப்ஐஆர், நடிகர் பிரபுதேவாவுடன் பொய்க்கால் குதிரை, திசேஸ் போன்ற படங்களில் நடித்து வருகிறார். இதுதவிர சமூக வலைத்தளங்களிலும் ரைசா மிகவும் ஆக்டிவாக இருந்து வருகிறார்.
இந்நிலையில் தான் சமீபத்தில் ரைசா சோசியல் மீடியாவில் அவரது ரசிகர்களுடன் உரையாடினார். அப்போது ரசிகர் ஒருவர் லிவ்விங் டுகெதர் வாழ்க்கையில் விருப்பம் இருக்கிறதா? என கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்த ரைசா, "லிவ்விங் டுகெதர் ரிலேசன்ஷிப் எனக்கு ஓகே தான். ஆனால் அதற்கு எனக்கு ஒரு காதலன் வேண்டுமே? அது இல்லாமல் நான் என்ன செய்ய முடியும். அதனால் அந்த வாழ்க்கையை கற்பனை செய்து கொள்கிறேன்" என பதிலளித்துள்ளார்.