விஜயகாந்தை கழட்டி விட்டுட்டு அஜித்தை ஹீரோவாக்கிட்டேன்.! படம் சூப்பர் டூப்பர் ஹிட்.!

Published on: March 11, 2022
---Advertisement---

முன்பெல்லாம் ஒரு அறிமுக இயக்குனரோ, அல்லது, பழைய இயக்குனரோ முதலில் தயாரிப்பு நிறுவனத்திடம் சொல்லி  ஓகே வாங்கிவிடுவர். பிறகு தான் அந்த கதைக்கேற்ற ஹீரோவை தயாரிப்பு நிறுவனம் ஓகே செய்து  படத்திற்கான வேலைகளை செய்வார்கள்.

ஆனால், தற்போது நிலைமையே வேறு. சரி அதனை விட்டுவிடுவோம். வானத்தைபோல, சூரியவம்சம் என பல்வேறு சூப்பர் ஹிட் படங்களை கொடுத்தவர் விக்ரமன் இவரது உதவி இயக்குனராக வெகுநாட்கள் பணியாற்றியவர் ராஜகுமாரன். இவர் நடிகை தேவயானியின் கணவர் ஆவார்.

இவர் சில நல்ல திரைப்படங்களை இயக்கியும் உள்ளார். இவர், விக்ரமன் உடன் நீண்ட வருடங்களாக பணியாற்றியதால் இயக்குனர் வாய்ப்பு எளிதில் கிடைத்துவிட்டது. அதுவும், ஒரே நேரத்தில் மூன்று தயாரிப்பு நிறுவனங்களிடம் கதை கூறி அதனை ஓகே செய்து வைக்கும் அளவுக்கு திறமையாக கதை சொல்லிவிட்டார்.

இதையும் படியுங்களேன் – நயன்தாரா அத எப்பமா வெளிய விடுவ!.. காத்து கிடக்கும் ரசிகர்கள்…..

சூர்யா மூவிஸ்க்கு விஜயகாந்தை நாயகனாக வைத்து ஒரு கதை கூறிவிட்டார். அதே நேரத்தில் சூப்பர் குட் பிலிம்ஸ் ஆர்.பி.சௌத்திரியிடம் நீ வருவாய் என கதை கூறி விஜய் – அஜித்தை வைத்து செய்யலாம் என கூறிவிட்டார்.

பின்னர் விக்ரமன் , நீங்கள் ஆர்.பி.சௌத்திரி அவர்களிடம் கூறிய கதையை செய்துவிடுங்கள் என ராஜகுமாரனிடம் கூறவே, உடனே விஜயகாந்த் பட வாய்ப்பை கழட்டிவிட்டுட்டு அஜித் – பார்த்திபனை வைத்து நீ வருவாய் என படவேலைகளை ஆரம்பித்து விட்டார் ராஜகுமாரன்.

Manikandan

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.

Leave a Comment