இயக்குனர் விக்ரமனிடம் உதவியாளராக இருந்தவர் ராஜகுமாரன். நீ வருவாய் என என்கிற திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானார். அதன்பின் சரத்குமார், விக்ரம், தேவயாணி ஆகியோரை வைத்து விண்ணுக்கும் மண்ணுக்கும் என்கிற படத்தை இயக்கினார்.
தேவயானியை காதலித்து திருமணமும் செய்து கொண்டார். அதன்பின் திருமதி தமிழ் என்கிற படத்தை இயக்கி நடித்தார். அதன்பின் அவர் எந்த படத்தை இயக்கவில்லை.
கடந்த சில வருடங்களாகவே ஊடகங்களில் பேட்டி கொடுக்கும் ராஜகுமாரன் ‘கமல், விக்ரம் போன்றவர்கள் எல்லாம் சிறந்த நடிகர்கள் இல்லை.. மகேந்திரன் பெரிய இயக்குனர் இல்லை..’ என்கிற ரீதியில் நிறைய பேட்டிகளை கொடுத்து வருகிறார். இதனால் ட்ரோலிலும் சிக்கினார்.
இயக்குனர் ராஜ்குமார் என்பதைவிட தேவயானியின் கணவர் என்பதுதான் அவரின் அடையாளமாகவே இருக்கிறது. சினிமா உலகிலும் அவரை அப்படித்தான் இப்போதும் பார்க்கிறார்கள். இந்நிலையில் ஊடகம் ஒன்றில் பேசிய ராஜகுமாரன் ‘தேவயானி எப்படி என்னை திருமணம் செய்து கொண்டார் என்று மட்டும் கேட்கிறீங்களே.. ஆனால் தேவயாணியை ஒரு ராணியாக வச்சிருக்க நான் எவ்வளவு இழந்திருப்பேன் என்று ஏன் யாரும் யோசிக்க மாட்றீங்க.
நான் ஒரு இடத்துக்கு வாய்ப்பு கேட்டு கதை சொல்ல போயிருப்பேன்.. ஆனா தேவையாணி புருஷன் தினமும் வரான்னு சொல்லிடுவாங்கன்னு அங்க போவதை தவிர்த்திருக்கேன்.. விஜய், அஜித் எனக்கு நல்ல நண்பர்கள்தான்.. ஆனால் அவங்களை போய் பார்த்தா தேவையான கணவர் வந்து கெஞ்சிகிட்டு இருக்காருன்னு சொல்லுவாங்கன்னு நினைச்சு அதெல்லாம் செய்யாமல் விட்டிருக்கேன்.. இப்படி நான் நிறைய இழந்திருக்கேன்’ என்று ஃபீல் பண்ணி பேசியிருக்கிறார்.
