25 வருட நண்பர் முரளியே என்னை ஏமாத்திட்டார்!. குமுறும் தேவயாணி கணவர்!…

by சிவா |   ( Updated:2023-04-01 07:24:17  )
rajakumaran
X

திரையுலகில் பல படங்களில் நடித்து முன்னணி நடிகையாக இருந்தவர் நடிகை தேவயாணி. 15 வருடங்களுக்கு முன்பு முன்னணி கதாநாயாகி இருந்தார். அப்போது முன்னணி ஹீரோக்களாக இருந்த விஜய், விஜயகாந்த், சத்தியராஜ், பிரபு, சரத்குமார், பார்த்திபன் என பலருடனும் ஜோடு போட்டு நடித்தார்.

இயக்குனர் ராஜகுமாரனை காதல் திருமணம் செய்து கொண்டார். இவரின் திருமணம் திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியது. இவர்களுக்கு இரண்டு குழந்தைகளும் உள்ளனர். திருமணத்திற்கு பின் தேவயானியின் மார்க்கெட் கீழே இறங்கியது. மனைவி தேவயாணியை வைத்து ராஜகுமாரன் இயக்கிய திரைப்படம் காதலுடன். இந்த படத்தில் முரளி கதாநாயகனாக நடித்திருந்தார். இந்த திரைப்படம் 2003ம் ஆண்டு வெளியானது.

இந்நிலையில், சமீபத்தில் ஊடகம் ஒன்றுக்கு பேட்டியளித்த ராஜகுமாரன் ‘திரையுலகில் யாரையும் நம்பவே கூடாது. யார் எதிரி, யார் நண்பர் என்பதை கண்டுபிடிக்கவே முடியாது. நம்மிடம் சிரித்து பேசிவிட்டு நமக்கு தெரியாமலே நமக்கு குழிபறிப்பார்கள். நம்மை கட்டியணைத்து பாராட்டிவிட்டு வெளியே சென்று இவனை வைத்து படம் எடுக்க வேண்டாம் என தயாரிப்பாளரிடமும் சொல்வார்கள்.

நடிகர் முரளி எனக்கு 25 வருட நண்பர். நான் சென்னை வந்து முதன் முதலாக உதவி இயக்குனராக வேலை செய்த படத்தில் அவர்தான் ஹீரோ. அப்போது இருந்தே அவர் எனக்கு பழக்கம். ஆனால், காதலுடன் படம் எடுத்தபோது அவ்வளவு தொந்தரவு கொடுத்தார். படப்பிடிப்புக்கு சரியாக வரமாட்டார். சரியான ஒத்துழைப்பை கொடுக்காமல் என்னை மன உளைச்சலுக்கு ஆளாக்கினார். நெருங்கிய நண்பரே அப்படியே செய்யும்போது சினிமாவில் யாரை நம்ப முடியும்’ என ராஜகுமாரன் ஆதங்கத்துடன் பேசியுள்ளார்.

Next Story