27 வருடமாக நெ.1 இடத்தில் இருக்கும் ரஜினி.. சீண்டி பார்த்து சோர்ந்த ராஜமௌலி... என்ன நடந்தது?
ரஜினிகாந்தின் 22 வருட சாதனையை முறியடிக்க முடியாமல் ராஜமௌலி கஷ்டப்பட்டு கொண்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கிறது.
ராஜமௌலி இயக்கத்தில் வெளியான பேன் இந்தியா திரைப்படம் தான் ஆர்ஆர்ஆர். இப்படத்தினை விஜயேந்திர பிரசாத்துடன் இணைந்து ராஜமௌலி எழுதியுள்ளார். இதை டிவிவி எண்டர்டெயின்மெண்ட் சார்பில் டி.வி.வி.தனய்யா தயாரித்துள்ளார். இப்படத்தில் ஜூனியர் என்.டி.ஆர் மற்றும் ராம் சரண் நாயகர்களாக நடித்தனர்.
அஜய் தேவ்கன், அலியா பட், ஷ்ரியா சரண், சமுத்திரக்கனி, ரே ஸ்டீவன்சன், அலிசன் டூடி மற்றும் ஒலிவியா மோரிஸ் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். இது இரண்டு நிஜ வாழ்க்கை இந்திய புரட்சியாளர்களான அல்லூரி சீதாராம ராஜு (சரண்) மற்றும் கொமரம் பீம் (ராமராவ்) அவர்களின் கற்பனையான நட்பு மற்றும் பிரிட்டிஷ் ராஜ்ஜியத்திற்கு எதிரான அவர்களின் போராட்டத்தை மையமாக உருவாக்கப்பட்ட படம் ஆகும்.
இதையும் படிங்க: பாகுபலி ராசி பார்க்கும் RRR படக்குழு.! இது சரியா வருமா.! திகைக்கும் தியேட்டர்கள்.!
இந்த படம் திரைக்கு வந்து வெற்றிகரமாக ஓடி சாதனை புரிந்தது. கிட்டத்தட்ட இதன் வசூல் மட்டுமே 1200 கோடியாக இருந்தது. கடந்த அக்டோபர் 21ந் தேதி ஜப்பானில் இந்த படத்தினை ரிலீஸ் செய்தனர். கோடி கோடியாக செலவு செய்து ப்ரோமோஷன் செய்திருந்தனர். ஆனால் இந்த படத்தின் வசூல் தற்போது வரை 20 கோடிக்கு மட்டுமே வந்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கிறது.
சுமார் 27 ஆண்டுகளுக்கு முன்னர் வெளிவந்த ரஜினியின் முத்து திரைப்படம் தொடர்ந்து முதலிடத்தில் இருக்கிறது. இந்த படம் சுமார் 22 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்ததாக கூறப்படுகிறது. முத்துவிற்கு அடுத்த இடத்தில் இருந்த பாகுபலியை முந்திய ஆர்ஆர்ஆர் படத்தால் இன்னமும் முத்து படத்தினை முந்த முடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.