ரஜினி ஓகே சொல்லிட்டார்.. ஆனா சரியா வருமா?... தயங்கும் ராஜமவுலி....

by சிவா |
rajamouli
X

தெலுங்கில் சில படங்களே இயக்கியிருந்தாலும் பாகுபலி, பாகுபலி 2 படங்கள் மூலம் இந்திய சினிமா ரசிகர்களால் கொண்டாடப்பட்டவர் ராஜமவுலி. ரூ.400 கோடி பட்ஜெட்டில் உருவான இப்படம் தெலுங்கு, கன்னடம், மலையாளம், தமிழ், ஹிந்தி என 5 மொழிகளில் வெளியாகி ரூ.1200 கோடி வசூலை தொட்டது.

பாகுபலி திரைப்படத்தை ராஜமவுலி உருவாக்கியிருந்த விதத்தை கண்டு இந்தியாவின் பிரம்மாண்ட இயக்குனர்கள் மிரண்டு போனார்கள். ராஜமவுலி உறுதுணையாக இருப்பவர் அவரின் தந்தையும், கதாசிரியருமான விஜயேந்திர பிரசாத். ராஜமவுலி இயக்கும் படங்களுக்கு அவர்தான் கதை எழுதுவார். பாகுபலியும் அவர் எழுதியதுதான்.

baahubali

இப்படத்தை பார்த்த முன்னணி நடிகர்கள் அவரின் இயக்கத்தில் நடிக்க ஆசைப்பட்டனர். இதில், ரஜினியும் ஒருவர். ஏனெனில், சரித்திர கதைகளில் நடிப்பதில் ஆர்வம் உடையவர் ரஜினி. ரஜினியை வைத்து படம் எடுக்க வேண்டும் என்கிற ஆசை ராஜமவுலிக்கும் இருந்தது. ஆனால், அது ஏனோ நடக்கவில்லை.

67th-National-Film-Awards-Rajinikanth-thanks-bus-driver-friend-in

தற்போது ராம் சரண், ஜுனியர் என்.டி.ஆர் ஆகியோரை வைத்து ஆர்.ஆர்.ஆர். படத்தை இயக்கி முடித்துள்ளார் ராஜமவுலி. இப்படமும் பிரம்மாண்டமாக உருவாகியுள்ளது. இப்படம் வருகிற பொங்கலுக்கு வெளியாகவுள்ளது.

சமீபத்தில், ராஜமவுலியின் தந்தை விஜயேந்திர பிரசாத்தை ரஜினி சந்தித்து பேசியுள்ளார். அப்போது, ரஜினிக்காக ஒரு கதையை கூறியுள்ளார் விஜயேந்திர பிரசாத் கூற, அது ரஜினிக்கு மிகவும் பிடித்துப்போனது. கதை நன்றாக இருக்கிறது. நான் நடிக்கிறேன் என ரஜினி சம்மதம் சொல்லிவிட்டார். இதை ராஜமவுலியுடம் அவரின் தந்தை கூறியுள்ளார்.

vijayendra prasad

ரஜினி சம்மதம் கூறியது மகிழ்ச்சி என்றாலும், ராஜமவுலி படங்களின் நாயகர்கள் நல்ல பிட்னஸோடு அதாவது உடல் வலுவானவராக இருக்க வேண்டும். ரஜினி அந்த வயதையெல்லாம் கடந்துவிட்டார். அவருக்கு தற்போது 72 வயதாகி விட்டது. மேலும் குறைந்தது 2 வருடங்கள் படம் எடுப்பார் ராஜமவுலி. ரஜினி அவ்வளவு நாட்கள் கால்ஷூட் கொடுப்பாரா என்பது தெரியவில்லை. எனவே, இதுபோன்ற காரணங்களால் ரஜினியுடன் இணைவது சரியா வருமா என தயங்கி வருகிறாராம் ராஜமவுலி...

ராஜமவுலியும், ரஜினியும் இணைந்தால் அது இந்திய சினிமாவின் முக்கிய படமாக இருக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. ஆனால், அதற்கான காலம் கடந்து விட்டதாகவே தெரிகிது.

Next Story