கோட் படத்தை எடுக்க ராஜமவுலிதான் காரணம்!.. இப்படி சொல்லிட்டாரே வெங்கட்பிரபு!..
Goat: சென்னை 28 படம் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானவர் வெங்கட்பிரபு. முதல் படமே ரசிகர்களை கவர்ந்து ஹிட் அடித்தது. ‘அட இவ்வளவு ஜாலியா ஒரு படமா?’ என திரையுலகினரே வியந்து போனார்கள். அதன்பின் அதே ஸ்டைலில் சரோஜா, கோவா படங்களை இயக்கினார்.
அஜித்தை வைத்து மங்காத்தா என்கிற படத்தை இயக்கினார். அஜித்தின் திரைவாழ்வில் அது ஒரு முக்கிய படமாக அமைந்தது. அஜித்தை வில்லனாக காட்டி ரசிகர்களை ரசிக்க வைத்து படத்தையும் ஹிட் செய்து காட்டினார். எனவே, பெரிய நடிகர்கள் வெங்கட்பிரபு இயக்கத்தில் நடிக்க ஆசைப்பட்டனர்.
இதையும் படிங்க: விஜயிற்காக களமிறங்கிய ரசிகர் கூட்டம்… கோட் டிக்கெட் விற்பனையில் புதிய சாதனை…
சிம்புவை வைத்து மாநாடு படத்தை கொடுத்த வெங்கட்பிரபு இப்போது விஜயை வைத்து கோட் படத்தை இயக்கி முடித்திருக்கிறார். இந்த படம் விஜய் ரசிகர்களிடையே பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இப்படம் வருகிற 5ம் தேதி வெளியாவதால் முதல் 3 நாட்களுக்குள் இப்படத்தை பார்க்க ரசிகர்கள் தியேட்டரில் அட்வான்ஸ் புக்கிங் செய்து வருகிறார்கள்.
ஆனாலும், பலருக்கும் டிக்கெட் கிடைக்கவில்லை. கோட் திரைப்படம் 400 கோடி செலவில் உருவாகியிருப்பதாக அப்படத்தின் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தியே ஒப்புக்கொண்டுள்ளார். இப்போதெல்லாம் பெரிய நடிகர்களின் படங்களின் பட்ஜெட் குறைந்தபட்சம் 250 கோடிக்கு மேல்தான் இருக்கிறது.
இதையும் படிங்க: ஆரம்பமே ஆப்பா?!.. கோட் ஸ்பெஷல் ஷோவை கேன்சல் செய்த தியேட்டர் ஓனர்ஸ்!..
ஏனெனில், நடிகர்களின் சம்பளமே 100 கோடியை தாண்டி போகிறது. கோட் படத்தில் நடிக்க விஜய் 200 கோடி சம்பளம் வாங்கியிருக்கிறார். ஒரு வருடம் படப்பிடிப்பு நடந்திருக்கிறது. இந்நிலையில், இந்த படம் உருவானது பற்றி பல முக்கிய தகவல்களை வெங்கட்பிரபு பகிர்ந்துள்ளார்.
கோட் படம் உருவானதற்கு தளபதி விஜய்க்கும், ஏஜிஎஸ் நிறுவனத்திற்கும் நன்றி. விஜய் சார் இல்லையெனில் இந்த படம் இல்லை. இந்த கதையை ஹாலிவுட் இயக்குனர்கள் இயக்க சில வருடங்கள் எடுத்துக்கொள்வார்கள். பட்ஜெட்டுக்கும் அதிகமாக இருக்கும் ஆனால், நாங்கள் ஒரு வருடத்தில் நம்ம பட்ஜெட்டில் இப்படத்தை எடுத்திருக்கிறோம். அதற்கு இன்ஸ்பிரேஷன் ராஜமவுலி சார்தான்’ என சொல்லி இருக்கிறார்.
அதாவது பாகுபலி, பாகுபலி2, ஆர்.ஆர்.ஆர் போன்ற படங்கள் சில நூறு கோடிகளில் எடுக்கப்பட்டாலும் தயாரிப்பாளர்களுக்கு நல்ல லாபத்தை கொடுத்தது. அதன்பின்னரே புஷ்பா, கேஜிஎப், கேஜிஎப் போன்ற படங்களை துணிந்து அதிக பட்ஜெட்டுக்களில் எடுக்க தயாரிப்பாளர்கள் முன் வந்தார்கள். இதைத்தான் சொல்லி இருக்கிறார் வெங்கட்பிரபு.