ராஜமௌலியா.... ? எனக்கு தெரியாது...! வந்த பெரிய வாய்ப்பை தட்டிக் கழித்த பிரபலம்...
இந்திய சினிமாவில் அதிக சம்பளம் வாங்கும் இயக்குனர்களின் பட்டியலில் முதலில் இருப்பவர் ராஜமௌலி. இவர் எடுத்த அனைத்து படங்களுமே செம ஹிட். மேலும் இவரின் இயக்கத்தில் அதிக வசூலை பெற்ற படமாக பாகுபலி திரைப்படம் விளங்கியது. பிரம்மாண்டத்தை புகுத்தி ரசிகர்களை பிரமிப்பில் ஆழ்த்தக் கூடியவர் ராஜமௌலி.
முதன் முதலில் இவர் எடுத்த திரைப்படம் தெலுங்கில் ஸ்டூடண்ட் நம்பர் ஒன். இந்த படத்தில் ஜூனியர் என்.டி.ஆர் நடித்திருந்தார். படம் பெரிய வெற்றியை பெற்று ஜூனியர் என்.டி.ஆர்-யுன் பெரிய இடத்திற்கு கொண்டு சென்றது. இந்த படம் தமிழில் அதே பெயரில் எடுக்கப்பட்டது. மேலும் மகதீரன் தமிழில் மாவீரன் என்ற பெயரில் தயாராகி மாபெரும் வெற்றி பெற்றது.
இந்த நிலையில் நான் ஈ என்ற படம் நேரடியாக தமிழிலும் தெலுங்கிலும் எடுக்க திட்டமிட்டார். இந்த படத்திற்காக பாடல் வரிகளை எழுத மதன் கார்கியை அணுக அவரது அலுவலகத்திற்கு தொடர்பு கொண்டு பேசினார்களாம் ராஜமௌலியின் உதவியாளர்கள்.ஆனால் மதன் கார்கி படம் டப்பிங் படமாக இருப்பதால் என்னால் பண்ண முடியாது என சொல்லிவிட்டாராம்.
மீண்டும் மதன் கார்கியின் அப்பா மூலம் பேச்சுவார்த்தை நடத்தினார்களாம். திரும்பவும் ராஜமௌலினு யாரையும் எனக்கு தெரியாது. அப்படி ஒரு பேரை நான் கேள்வி பட்டதில்லை என்று கூறினாராம். அதன் பின் ராஜமௌலியை பற்றியும் அவர் எடுத்த படங்களையும் பற்றி சமூக வலைதளங்களில் ஆராய்ந்த பின்னரே இதற்கு சம்மதம் தெரிவித்தாராம்.