Bahubali: ‘பாகுபலி’ படம் உருவானதுக்கு சூர்யாதான் காரணமா? ராஜமவுலியே சொல்லியிருக்காரே

Published on: November 8, 2024
surya
---Advertisement---

Bahubali : சூர்யாவின் நடிப்பில் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் திரைப்படம் கங்குவா. இந்த திரைப்படம் வரும் 14ஆம் தேதி உலகெங்கிலும் பழமொழிகளில் ரிலீஸ் ஆக இருக்கின்றது. பேன் இந்தியா திரைப்படமாக உருவாகி இருக்கும் இந்த படத்தை சிறுத்தை சிவா இயக்க ஞானவேல் ராஜா படத்தை தயாரித்திருக்கிறார் .

தேவி ஸ்ரீ பிரசாத் படத்திற்கு இசையமைத்திருக்கிறார் .படத்தில் இதுவரை இல்லாத அளவு சூர்யா ஒரு வித்தியாசமான கெட்டப்பில் நடித்திருப்பது அனைவரின் எதிர்பார்ப்புக்கும் ஒரு காரணமாக அமைந்திருக்கிறது. வரலாற்று பின்னணியை மையமாக வைத்து உருவாக்கப்பட்ட இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் சென்னையில் மிகவும் கோலாகலமாக நடைபெற்றது .

இதையும் படிங்க: Vijayakanth: எதிர்பார்க்கவே இல்ல! இவ்ளோ பணம் கொடுப்பாருனு.. விஜயகாந்த் பற்றி சிலாகித்து பேசிய நடிகை

தற்போது பட குழு படத்தின் ப்ரோமோஷன் பணிகளில் தீவிரமாக இறங்கி இருக்கிறார்கள். நேற்று சென்னையில் பத்திரிக்கையாளர் சந்திப்பு நடைபெற்றது. அப்போது சூர்யா பல்வேறு விஷயங்களை பகிர்ந்து இருந்தார். அதோடு ஹைதராபாத்திலும் படத்தின் பிரமோஷனுக்காக படக்குழு சென்றிருந்தது.

அப்போது அங்கு சிறப்பு விருந்தினராக ராஜமவுலியும் அழைக்கப்பட்டார். மேடையில் சூர்யாவும் ராஜமவுலியும் இணைந்து பல்வேறு விஷயங்களை பகிர்ந்து கொண்டனர். அப்போது ராஜமவுலியை பார்த்து சூர்யா அனைவரும் அவருடைய குடும்ப போட்டோ அல்லது அப்பா அம்மா போட்டோ இவற்றை தான் தன்னுடைய மொபைலில் வால்பேப்பராக வைத்திருப்பார்கள்.

இதையும் படிங்க: ரஜினி, கமல் சேர்ந்து இத்தனை படம் ஒன்னா நடிச்சிருக்காங்களா?!… இதுல இவ்வளவு ஹிட்டு படங்களா?..!

kanguva
kanguva

ஆனால் ஞானவேல் ராஜா உங்களுடைய புகைப்படத்தை வால்பேப்பராக வைத்துள்ளார். அந்த அளவுக்கு உங்களின் தீவிர ரசிகர் ஞானவேல் ராஜா என சூர்யா ராஜமவுலியிடம் கூறினார். மேலும் ராஜமவுலி சூர்யாவை பார்த்து பாகுபாலி போன்ற பேன் இந்தியா படத்தை உருவாக்க நீங்கள் தான் என்னுடைய இன்ஸ்பிரேஷன் .உங்களுடன் இணைந்து வேலை செய்யும் வாய்ப்பை தவறவிட்டதை நினைத்து இப்போது வரை நான் வருத்தப்படுகிறேன் என ராஜமவுலி கூறியது அனைவருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

இதை கேட்டதும் மேடைக்கு கீழே உட்கார்ந்திருந்த சூர்யா ஓடி வந்து ராஜமவுலியை கட்டி அணைத்து அவருடைய மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.

Rohini

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.