ஆஸ்கர் வாங்குறதுக்கு ராஜமௌலி இவ்வளவு கோடி செலவழிச்சாரா?? என்னப்பா சொல்றீங்க?

RRR
ராஜமௌலி இயக்கிய “RRR” திரைப்படம் கடந்த 2022 ஆம் ஆண்டு மார்ச் மாதம் வெளியானது. மிகவும் பிரம்மாண்டமாக உருவான இத்திரைப்படம் உலகளவில் கிட்டத்தட்ட 1200 கோடிகளுக்கும் மேல் வசூல் செய்து சாதனை படைத்தது.
ஆஸ்கர் விருது
உலகளவில் உள்ள பல ரசிகர்களின் விருப்பமான திரைப்படமாக “RRR” அமைந்தது. குறிப்பாக அமெரிக்கர்கள் இத்திரைப்படத்தை மிகவும் விரும்பிப் பார்த்தனர். இதனை தொடர்ந்து இத்திரைப்படம் சர்வதேச அளவில் கிட்டத்தட்ட 28க்கும் மேற்பட்ட விருதுகளை பெற்றது.

Naatu Naatu
இந்த நிலையில் கடந்த 12 ஆம் தேதி நடைபெற்ற 95 ஆவது ஆஸ்கர் விருது விழாவில், “RRR” திரைப்படத்தில் இடம்பெற்ற “நாட்டு நாட்டு” பாடலுக்கு சிறந்த பாடலுக்கான ஆஸ்கர் விருது வழங்கப்பட்டது. வரலாற்றில் ஒரு இந்திய பாடலுக்கு ஆஸ்கர் வழங்கப்பட்டது இதுவே முதல்முறை.
“நாட்டு நாட்டு” பாடல் உலகளவில் மிகவும் டிரெண்டான பாடலாகும். இந்த பாடலில் ராம் சரணும் ஜூனியர் என்டிஆரும் ஆடும் நடனங்களை பலரும் ரீல்ஸ் செய்து சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு வந்தனர். அந்தளவுக்கு மிகவும் பிரபலமான பாடலாக இப்பாடல் அமைந்தது.

Rajamouli
80 கோடி செலவு
இந்த நிலையில் இப்பாடலுக்கு ஆஸ்கர் வழங்கப்பட்டது ரசிகர்களை குஷிப்படுத்தியது. இதனை தொடர்ந்து இணையத்தில் “RRR” திரைப்படத்திற்கு ஆஸ்கர் வாங்குவதற்காக கிட்டத்தட்ட 86 கோடிகள் செலவழிக்கப்பட்டுள்ளதாக ஒரு தகவல் பரவி வருகிறது.

Chitra Lakshmanan
இது குறித்து பிரபல தயாரிப்பாளரும் நடிகருமான சித்ரா லட்சுமணனிடம் ஒரு நேயர் கேட்டபோது, அதற்கு பதிலளித்த அவர், “இது போன்ற தகவல்கள் எப்படி பரவுகிறது என்றே தெரியவில்லை. யாரோ கணக்கு பிள்ளை போல ராஜமௌலியின் அருகில் இருந்து பார்த்தது போல் 86 கோடி என துல்லியமாக கூறுகிறார்கள். என்னை பொறுத்தவரை இது வதந்தி என்றுதான் நான் நினைக்கிறேன்” என கூறியுள்ளார் அவர். எனினும் இணையத்தில் இந்த செய்தி மிகவும் தீவிரமாக பரவி வருவது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: ராசியில்லாத நடிகை என்று பரவிய வதந்தி… வரிசையாக பல படங்களில் இருந்து வெளியேற்றப்பட்ட சோக சம்பவம்!!