அஜித்தை பார்த்து ஆச்சர்யப்படுகிறேன் - ராஜமவுலி நெகிழ்ச்சி

by சிவா |
ajith
X

நடிகர் அஜித் மிகவும் எளிமையானவர். மிகவும் பண்பாக நடந்து கொள்வார் என அவரை பல திரையுலக பிரபலங்களும் ஏற்கனவே கூறியுள்ளனர். இதை தற்போது பாகுபலி பட இயக்குனர் ராஜமவுலி உறுதி செய்துள்ளார்.

ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியில் அவரிடம் அஜித் பற்றி கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதில் கூறிய அவர் ‘ஹைதராபாத்தில் உள்ள ராமோஜிராம் பிலிம் சிட்டியில் அவரை பார்த்தேன். ஒரு உணவகத்தில் மதிய உணவு சாப்பிட்டு கொண்டிருந்தார். என்னை பார்த்ததும் எழுந்து வந்து என்னை விசாரித்தார்.

அதன்பின், அவரின் டேபிளுக்கு என்னை அழைத்து சென்றார். இருவரும் பேசிக்கொண்டிருந்தோம். அப்போது என் மனைவி அங்கு வந்தார். அவரை பார்த்து கை அசைத்தேன். அவர் உங்கள் மனைவியா எனக்கேட்டுவிட்டு அவரிடம் சென்று தன்னை அவரே அறிமுகம் செய்து கொண்டார்.

அவரின் ரசிகர்கள் அவர் மீது பைத்தியமாக உள்ள நிலையிலும் தன்னை தல அழைக்க வேண்டாம் அஜித்குமார் என அழையுங்கள் என அவர் கூறியிருப்பது சாதாரண விஷயம் அல்ல. அவர் ஒரு ஆச்சர்யம்’ என ராஜமவுலி புகழந்து பேசினார்.

Next Story