டாப் நாயகிக்கு நூல் விட்ட ராஜமௌலி... அய்யோ நான் மாட்டேன்... தெறித்து ஓடிய நாயகி...
தமிழ் சினிமாவில் மட்டுமல்ல இந்திய மொழிகளில் அனைத்திலும் மிகப்பெரிய வெற்றியினை பெற்ற பாகுபலியில் சிவகாமியாக முதலில் நடிக்க இருந்தது யார் தெரியுமா?
இயக்குனர் ராஜமௌலி இயக்கத்தில் வெளிவந்த பிரம்மாண்ட திரைப்படம் பாகுபலி. இப்படம் முதல் மற்றும் இரண்டு பாகங்களாக வெளியாகியது. அதிலும் முதல் பாகத்தில் வைக்கப்பட்ட சஸ்பென்ஸ் பலருக்கு மிகப்பெரிய குடைச்சலை கொடுத்தது. ஏன் கட்டப்பா பாகுபலியை கொன்றார் என ரசிகர்கள் தொடர் தேடலில் இருந்தனர். இதற்கு விடையாக இரண்டாம் பாகம் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்தது.
இப்படத்தில் பிரபாஸ், அனுஷ்கா, தமன்னா, சத்யராஜ், ரம்யா கிருஷ்ணன் என தெலுங்கு மற்றும் தமிழ் திரைப்பட முன்னணி நடிகர்கள் நடித்திருந்தனர். பிரபல தெலுங்கு தயாரிப்பாளரான ஷோபு யார்லகட்ட தயாரிப்பில் இசையமைப்பாளர் கீரவாணி இசையில் பாடல்கள் உருவாகி இருந்தது. தமிழில் ஸ்டூடியோ கிரீன், ஸ்ரீ தென்றல் பிலிம்ஸ் மற்றும் யூ வி கிரேஷன்ஸ் நிறுவனம் இணைந்து வெளியிட்டனர்.
இத்தனை சிறப்புமிக்க இந்த படத்தில் முதலில் சிவகாமி வேடத்தில் நடிகை ஸ்ரீதேவியினை நடிக்க வைக்க தான் ராஜமௌலி விரும்பினாராம். அதற்காகவே அந்த கதாபாத்திரம் மிக கம்பீரமாக வடிவமைக்கப்பட்டதாம். இதுகுறித்து ஸ்ரீதேவியிடம் கதை சொல்ல படக்குழு சென்றது. ஸ்ரீதேவி கதையை கேட்கும் முன்னரே ஏற்கனவே புலி படத்தில் நடித்துவிட்டேன். அப்படம் எனக்கு பெரிய வரவேற்பினை கொடுக்கவில்லை. இன்னொரு ராணி வேடமெல்லாம் வேண்டாம் என மறுத்துவிட்டாராம்.
ஆனால், அவர் நினைத்ததை விட சிவகாமி கதாபாத்திரம் வேறு மாதிரி காட்சியமைக்கப்பட்டது. அதில் ரம்யா கிருஷ்ணன் வாழ்ந்திருந்தார் என்றே சொல்ல வேண்டும். படமும் சூப்பர் ஹிட் அடித்தது. இதன்பின்னரே, ஸ்ரீதேவி தான் எவ்வளவு பெரிய தவறு செய்து விட்டேன். படத்தினை மிஸ் செய்தது வருத்தமாக இருப்பதாக இயக்குனர் ராஜமௌலியிடம் மன்னிப்பும் கேட்டாராம்.