75 ஆயிரம் சம்பளத்தை விட்டு போனேன்!. அட்லி 3500 கொடுத்தாரு!.. மேடையிலேயே புலம்பிய நடிகர்!..
பொதுவாக பலருக்கும் சினிமா மீது ஒரு மோகம் இருக்கிறது. ஒரு பெரிய ஸ்டார் ஆக வேண்டும் என்கிற ஆசை இல்லாவிட்டாலும் கூட ஒரு படத்தில் ஒரு வேடத்தில் நடிக்க வேண்டும் என்கிற ஆசை பலருக்கும் இருக்கிறது. ஆனால், எல்லோரும் அதற்கான முயற்சிகளை செய்வது இல்லை. அப்படியே முயற்சி செய்தாலும் வாய்ப்பு கிடைக்கும் என சொல்ல முடியாது.
சினிமா ஆசையில் சொந்த ஊரைவிட்டு சென்னை வந்து சாப்பாட்டுக்கே வழி இல்லாமல் கஷ்டப்படுபவர்களின் எண்ணிக்கை லட்சத்தை தாண்டும். சினிமாவில் 25 வருடங்கள் இருப்பதாக சொல்வார்கள். அவர்கள் நடித்த படங்களின் எண்ணிக்கை மிகவும் சொற்பமாக இருக்கும். அதிலும், ஒரு படத்தில் ஒரு காட்சியில் வந்துவிட்டு போன நடிகராக இருப்பார்கள்.
இதையும் படிங்க: ஓட்டு போட ஏன் வரல?!.. அரசியலுக்கு வருவீங்களா?!.. கேள்விக்கு ஜோ சொன்ன பதிலை பாருங்க!..
ஆனாலும், தனக்கு ஒரு நல்ல வாய்ப்பு கிடைக்கும் என்கிற நம்பிக்கையில் முயற்சி செய்து கொண்டே இருப்பார்கள். அதேநேரம், சினிமா எல்லோரையும் அரவணைக்கும் என சொல்ல முடியாது. அதற்கு காரணம் அதிகமான காழ்ப்புணர்ச்சி, பொறாமை நிலவும் துறை அது. ஒருவரை சுலபமாக மேலே தூக்கிவிட்டு விடாது.
நடிகர் கவினை வைத்து ஸ்டார் படத்தை இயக்கி இருப்பவர் இளம் இயக்குனர் இளன். 3 வருடங்கள் சினிமாவில் போராடி இயக்குனராக மாறி இருக்கிறார். இந்த படத்திற்கு நல்ல எதிர்பார்ப்பும் ஏற்பட்டிருக்கிறது. அதற்கு காரணம் கவின் பெண் வேடத்தில் நடித்த வீடியோ சமீபத்தில் வெளியாகி வரவேற்பை பெற்றது.
இதையும் படிங்க: போனை எடுத்தா ஹலோ சொல்றது தானே முறை… என்னங்க சுந்தர்.சி இப்படியா பேசுவாரு?
இந்த படத்தின் இயக்குனர் இளனின் தந்தை பாண்டியன். இவர் அடிப்படையில் ஒரு போட்டோகிராபர். திருமணம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளுக்கு புகைப்படங்கள் எடுப்பவர். இவருக்கும் நடிப்பின் மீது அதிக ஆர்வம் உண்டு. இந்த பட விழாவில் பேசிய பாண்டியன் ‘ராஜா ராணி படம் உருவானபோது அட்லி என்னை நடிக்க அழைத்தார். அப்போது ஒரு திருமண வேலை வந்தது. 75 ஆயிரம் ரூபாய் தருகிறோம்’ என சொன்னார்கள்.
ஆனால், நயன்தாரா, சத்தியராஜ் ஆகியோருடன் நடிக்கும் வாய்ப்பு என்பதால் அங்கு போனேன். படத்தில் ஜெய்க்கு அப்பாவாக நடிக்க வைத்தார்கள். நடித்து முடித்த பின் எனக்கு 3500 சம்பளம் கொடுத்தார்கள். ‘இவ்வளவுதானா?’ என வருத்தப்பட்டேன்., ஆனால், அந்த படம் மூலம் எனக்கு சில வாய்ப்புகள் வந்தது. ஆனாலும். தோல்வியடைந்த நடிகராகத்தான் இருக்கிறேன். ஆனால், என் மகன் இயக்குனர் ஆனது எனக்கு சந்தோசம்’ என பாண்டியன் பேசினார்.