படப்பிடிப்பில் கண்டப்படி திட்டி அழ விட்டுடுவார்.. – கதாநாயகிகள்கிட்ட கூட கண்டிப்பாதான் இருப்பாராம் டி.ஆர்..!

Trajendran 2
இசையமைப்பாளர், நடிகர், இயக்குனர் என பன்முக திறமை கொண்டவர் நடிகர் டி.ராஜேந்தர். சினிமாவிற்கு கதாநாயகன் ஆவதற்கு முக அழகுதான் முக்கியம் என இருந்த தமிழ் சினிமாவில் திறமையை வைத்து கூட முன்னேற முடியும் என்பதை அப்போதே நிரூபித்தவர் டி.ஆர்.
பல இயக்குனர்கள், நட்சத்திரங்கள் டி.ஆருடன் பணிப்புரிந்துள்ளனர். அவர்கள் அனைவருமே கூறும் விஷயம் ஒன்றுதான். டி.ஆரிடம் கற்றுக்கொள்ள ஏராளமான விஷயங்கள் இருக்கும். சமீபத்தில் ஏ.ஆர் ரகுமான் கூட டி.ஆரை புகழ்ந்து பேசியிருந்தார்.

trajendar
நடிகை ரேணுகா ஒரு பேட்டியில் பேசும்போது டி.ராஜேந்தர் நல்ல வேலை தெரிந்தவர். ஆனால் படத்திற்கு என்று ஒரு வசனத்தை எழுதி வைத்திருக்க மாட்டார். படப்பிடிப்பின்போது அவருக்கு தோன்றும் வசனத்தை கூறி அதை பேச சொல்வார்.
நடிகையை அழ வைத்த டி.ஆர்:
ஒரே வசனம் என்றால் அதை மனப்பாடம் செய்து அப்படியே பேசிவிடலாம். ஆனால் ஒவ்வொரு முறையும் வசனம் மாறும் எனும்போது அவரது திரைப்படங்களில் நடிப்பது கடினமாக இருக்கும். நாடகத்தில் வசனங்களை மனப்பாடம் செய்து பேசியுள்ளேன்.

renuka-malayalam-actress
எனக்கே அவ்வளவு கஷ்டம் என்றால் புதிதாக வருபவர்கள் நிலை எப்படி இருக்கும்” என ரேணுகா கூறியுள்ளார். மேலும் அவர் கூறும்போது “டி.ஆர் படப்பிடிப்பின்போது வசனங்கள் சரியாக வரவில்லை எனில் கண்டபடி திட்டிவிடுவார். நான் அவர் படங்களில் நடித்த நாட்களில் தினமும் அழுதுக்கொண்டேதான் இருப்பேன் என கூறியுள்ளார்.
அப்படி அனைவரிடமும் கண்டிப்பான ஒரு இயக்குனராக டி.ராஜேந்தர் இருந்துள்ளார்.