டி.ராஜேந்திரனால் பட வாய்ப்பை இழந்த பிரபல நடிகை!.. பூட்டி வைத்து விட மறுத்த சம்பவம்!...
தமிழ் சினிமாவில் எத்தனையோ இயக்குனர்கள் தங்கள் திறமைகளால் உச்சத்தை அடைந்திருக்கிறார்கள். அவர்கள் மத்தியில் நடிகரும் இயக்குனருமான டி. ராஜேந்திரன் சற்று வித்தியாசமானவர். இப்ப உள்ள தலைமுறைகளில் பலபேர் எல்லா துறைகளிலும் கை தேர்ந்தவர்களாக இருக்கிறார்கள்.
ஆனால் அந்த காலத்தில் டி.ராஜேந்திரன் அளவுக்கு திறமைசாலியான நடிகரை காண்பது அறிது. நடிப்பு, திரைக்கதை அமைக்கும் விதம், பாடல், இசை, ஒளிப்பதிவி போன்ற எல்லாத் துறைகளும் அவருக்கும் அத்துப்படி. அவரின் சூப்பர் ஹிட் படமான உயிருள்ள உஷா என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை நளினி.
இதையும் படிங்க : விட்டத புடிக்கனுனு வந்துட்டு மொத்தமா கவுத்துப்புட்டீங்களே மாப்பு?..நடிகையை தகாத வார்த்தைகளால் திட்டிய கஞ்சா கருப்பு!..
அந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து டப்பிங் வேலைகள் நடந்து கொண்டிருந்தது. அப்போது தயாரிப்பாளரும் இயக்குனருமான சித்ரா லட்சுமணன் தன் படமான மண்வாசனை படத்திற்காக ஹீரோயினை தேடிக்கொண்டிருந்த
சமயத்தில் நளினி என்ற ஹீரோயின் இருப்பதை அறிந்து அந்த டப்பிங் தியேட்டருக்கு போயிருக்கிறார்.
இவர் வந்ததை அறிந்த டி. ராஜேந்திரன் தன் பட நடிகையை படம் வெளியீட்டிற்கு முன் வேறு எந்த படத்திலும் நடிக்க வைக்க அனுமதிக்க மாட்டேன் என்று நளினியை பார்க்க அனுமதிக்க மறுத்துவிட்டாராம். அனுமதித்து இருந்தால் மண்வாசனை படத்தில் ரேவதிக்கு பதிலாக நளினிதான் நடித்திருப்பார். ஆனால் ரேவதி மண்வாசனை படத்திற்கு பிறகு தான் மிகவும் பிரபலமானார் என்பது குறிப்பிடத்தக்கது.