அகங்காரத்தின் திமிரா? அறிவு இல்ல? 150 கோடி சம்பளம் வாங்குனா பெரிய இவனா? யாருய்யா இந்த லேடி?
தமிழ் சினிமாவில் இன்று உச்சம் தொட்ட நடிகராக இருப்பவர் விஜய். ஆனால் அவருடைய இத்தனை வருட கால வளர்ச்சியை ஒரே ஒரு பாட்டில் தலைகுனிய வைத்து விட்டார். சமீபத்தில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ படத்தில் நடித்து வரும் விஜயின் முதல் சிங்கிள் பாடல் வெளியானது.
அந்தப் படத்தின் போஸ்டரிலும் புகை பிடிப்பதை போன்று விஜய் போஸ் கொடுத்திருந்தார். அந்தப் பாடலிலும் முழுவதுமாக வாயில் சிகரெட் வைத்தபடியே தோன்றியிருந்தார். அது மட்டும் இல்லாமல் மன்சூர் அலிகான் கையில் பாட்டிலுடன் இருப்பது போன்ற காட்சிகளும் அந்தப் பாடலில் இடம்பெற்று இருந்தன.
இது வெளியான மூன்று நாட்களிலேயே விஜயின் கல்வி விருது விழா நடைபெற்றது. அந்த விழாவில் பேசிய விஜய் மாணவர்களிடம் பெரியாரைப் படியுங்கள் காமராஜரை படியுங்கள் அம்பேத்கரை படியுங்கள் என்று குறிப்பிட்டிருந்தார். ஆனால் இந்த மூவரும் மது புகை இவைகளுக்கெல்லாம் எதிரானவர்கள் .ஆனால் விஜயோ அதை தன் போஸ்டரில் காட்டி இருக்கிறார். இது எந்த விதத்தில் நியாயம்.
இதுதான் இப்போது பேசு பொருளாக மாறி உள்ளது. பொது வாழ்க்கையில் நுழைய விரும்பும் விஜய் படங்களில் இந்த மாதிரி காட்சிகளில் நடித்தால் மக்கள் பலம் அதிகம் உள்ள விஜயால் பாதிக்கப்படுவது யார்?.
இந்த நிலையில் பாமகவில் மகளிர் அணி தலைவராக இருந்து இப்போது அந்த கட்சியில் இருந்து விலகி அனைத்து மக்கள் அரசியல் கட்சி என்ற தனிக் கட்சியை தொடங்கியவர் ராஜேஸ்வரி பிரியா. டாஸ்மாக் கடைகளை மூடக்கோரி சாலை மறியல் உள்ளிட்ட பல போராட்டங்களை நடத்தி வருபவர் இந்த ராஜேஸ்வரி.
இவர் விஜய்க்கு எதிராக ஒரு பேட்டியில் மிக ஆவேசமாக பேசியுள்ளார். அதாவது விஜய் அரசியலுக்கு வருவார் என்றே வைத்துக் கொள்வோம். இது அவருக்கு ஆபத்தில் முடியும் என்று கூட தெரியும் இந்த சமயத்தில் இந்தப் பாடல் வெளிவந்தது பெரும் சர்ச்சையாக மாறியுள்ளது. இந்தப் பாடலுக்கு எதிராக போதைப்பொருள் தடுப்பு பிரிவில் ஒரு வழக்குப் பதிவும் போடப்பட்டிருக்கின்றது. நானும் எல்லோருக்கும் தனியாக நோட்டீசும் அனுப்பி இருக்கிறேன். சென்சார் போர்டுக்கும் இந்த பாடல் இந்த படத்தில் வரவிடாமல் தடுப்பதற்கான எல்லா முயற்சிகளையும் எடுத்து வருகின்றேன்.
ஏனெனில் இனிமேல் இந்த தவறை வேறு யாரும் செய்து விட கூடாது என்பதற்காக தான். குறிப்பாக அந்தப் பாடலில் மில்லி உள்ளே போனால் கில்லி வெளியே வரும் என்பது எப்பேற்பட்ட இரட்டை அர்த்தமுள்ள வரி. இந்த வரியை எழுதுவதற்கான அவசியம் அப்படி என்ன இருக்கிறது. அப்படிப்பட்ட கேவலமானவனா லியோ.
என்ன அர்த்தத்தில் இந்தப் பாட்டுக்காரன் இந்த வரியை எழுதினான். நினைக்கும் போது கெட்ட கெட்ட வார்த்தைகள் ஆக வருகிறது. ஆனால் நான் மிகவும் கண்ட்ரோலாக இருக்கிறேன். மேலும் பாட்டிலில் வேண்டாம் அண்டாவில் கொண்டு வா என்றெல்லாம் அந்தப் பாடலில் இருக்கின்றது . அப்படி என்ன உனக்கு இந்த சமூகத்தின் மீது அக்கறை இல்லாமல் இருப்பதற்கு. 150 கோடி சம்பளம் வாங்குகிறீர்கள். அதை நினைக்கும் போது எந்த அளவுக்கு எங்களுக்கு கோபம் வரும்.
இத்தனை கோடி சம்பாதிக்கும் நீங்கள் என்ன செய்திருக்க வேண்டும். என்னை சிறு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அத்தனை பேரும் பின் தொடர்ந்து வருகிறார்கள் அதனால் இந்த கேரக்டரை வெளிப்படையாக காட்டாமல் மேலோட்டமாக காட்டுங்கள் என்று சொல்லி இருக்க தானே வேண்டும். இல்லையா கொஞ்சமாவது சமூகப் பொறுப்புணர்வு இருந்திருந்தால் இந்தப் பாடலை இப்போது வெளியிட வேண்டாம். படம் வெளியாகும் போது பார்த்துக் கொள்ளலாம் என்று சொல்லி இருக்கலாம்.
இதையும் படிங்க : அமலா பாலோடு முத்தக் காட்சியை 20 தடவை பண்ணுனேன்… ஓப்பனாக உடைத்த நடிகர்!..
கொஞ்சமாவது சமூகப் பொறுப்புணர்வு இருந்திருந்தால் இதை சொல்லயிருக்க வேண்டும். ஆனால் சொன்னாரா? இல்லையே? ஏன் அறிவில்லையா விஜய்க்கு ?இவ்வளவு கோடி சம்பாதிக்கிறோம். நான் விஜய். என்னை யாரும் ஒன்றும் செய்ய முடியாது என்ற திமிரின் இருக்கிறாரா? இல்லை அகங்காரத்தில் இருக்கிறாரா? யாருய்யா உன்னுடைய ரசிகர்கள் சின்ன சின்ன குழந்தைகள். அவர்கள் இந்த போஸ்டர்களையும் பாடல்களையும் பார்க்கும்போது அவர்கள் மனதில் என்ன தோன்றும். இதை கொஞ்சம் கூட யோசிக்கவில்லையா? இப்படி தன்னுடைய மொத்த ஆதங்கத்தையும் இந்த ராஜேஸ்வரி பிரியா அந்த பேட்டியில் முழுவதுமாக கொட்டி தீர்த்தார்.