பாட்ஷா படம் பார்த்து கே.எஸ்.ஆர் சொன்ன வார்த்தை...! அதிலிருந்து ஆரம்பமானது தான் ரஜினியின் அந்த படம்..
தமிழ் சினிமாவில் ரஜினியும் சரி கே.எஸ்.ரவிக்குமாரும் சரி ஒரு சரித்திரத்தையே உருவாக்கி காட்டியவர்கள் என்றே சொல்லலாம். ரஜினியின் நடிப்பு ஒரு பக்கம் என்றால் கே.எஸ்.ரவிக்குமாரின் படைப்பு மறு பக்கம். எத்தனை காவியங்கள் தன் படைப்புகளாக கொடுத்திருக்கிறார் கே.எஸ்.ரவிக்குமார். இவர்கள் கூட்டணியில் மறக்கமுடியாத படமாக அமைந்தது படையப்பா.
இன்றளவும் அந்த படத்திற்கு இருக்கும் மரியாதையும் பெருமையும் எத்தனை ஜென்மங்கள் ஆனாலும் மாறாது. ஆனால் இவர்கள் இருவரும் சேர்ந்து அமைந்த கூட்டணி முத்து படத்திற்காக தான். அது மட்டுமில்லை ரஜினியுடன் ஏ.ஆர்.ரகுமானுக்கும் இது தான் முதல் படம். கவிதாலயா பேனரில் கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் ரஜினியின் நடிப்பில் உருவான படம் தான் முத்து.
இதையும் படிங்கள் : ஜெயலலிதாவை நாயகியாக்க விரும்பிய எம்.ஜி.ஆர்…! நடக்காததால் என்னெல்லாம் பண்ணியிருக்காரு பாருங்க…!
முதலில் பாலசந்தர் ரஜினியிடம் கே.எஸ்.ரவிக்குமார் தான் இயக்குகிறார் என்று சொன்னதும் மறுக்காமல் சம்மதம் தெரிவித்த ரஜினி அதற்கு பின்னனியில் இருந்த காரணம் பாட்ஷா படம் தான். ஒரு சமயம் கே.எஸ்.ரவிக்குமாருடன் ரஜினி பாட்ஷா படத்தை பார்க்க படம் முடிந்ததும் படம் எப்படி இருக்கு என கேட்டிருக்கிறார் ரஜினி. படம் நல்லா தான் இருக்கு. ஆனால் படத்தில் உங்களை தவிர மற்ற எல்லாருக்கும் வயதாகிவிட்டது. அது ஒன்னு தான் குறை என்று மறைக்காமல் சொல்லியிருக்கிறார்.
அந்த ஒரு விஷயம் தான் ரஜினிக்கு கே.எஸ். ரவிக்குமாரை பிடித்த காரணம். அதனால் தான் பாலசந்தர் சொன்னதும் உடனே சரி என்று கூறிவிட்டார். மேலும் படம் வெளியாகி இதுவரை இல்லாத அளவில் வசூல் சாதனையும் படைத்து விட்டது. இந்தியா மட்டுமில்லாது ஜப்பானிலும் வசூல் சாதனையை அள்ளிவிட்டது முத்து திரைப்படம்.