ரஜினி கொடுத்த டார்ச்சர்! மேலும் 50 கோடிக்கு கடனாளியான லைக்கா.. இதுக்கு ஒரு எண்ட் கார்டே இல்லையா?
Actor Rajini: வேட்டையன் படத்தை விரைவில் முடிப்பதற்காக லைக்கா நிறுவனத்திற்கு ரஜினி கொடுத்த டார்ச்சர் பற்றிய செய்தி தான் சமூக வலைதளங்களில் இப்போது வைரலாகி வருகின்றது. தமிழ் சினிமாவில் மிகப்பெரிய தயாரிப்பு நிறுவனமாக இருந்தது லைக்கா நிறுவனம். இந்த நிறுவனத்தின் மூலம் பல பெரிய நடிகர்களின் படங்கள் வெளியாகி ஏகப்பட்ட வசூலை இந்த நிறுவனம் வாரி இறைத்தது.
நம்பர் ஒன் நிறுவனமாக இருந்த லைகா நிறுவனம் சமீப காலமாக பெரும் பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவிப்பதாக பல செய்திகள் வெளி வந்த வண்ணம் இருக்கின்றன. இதன் காரணமாகத்தான் விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்பு கூட தொடங்கப்படாமலேயே தள்ளிப்போய் கொண்டிருக்கிறது. லைக்கா தன் கைவசம் வேட்டையன், விடாமுயற்சி, இந்தியன் 2 போன்ற பெரிய படங்களை வைத்திருக்கும் நிலையில் இந்த படங்களின் ரிலீஸ் எப்போது என்றே தெரியாமல் தமிழ் திரை உலகம் விழிபிதுங்கி நிற்கின்றது.
இதையும் படிங்க: ‘பிதாமகன்’ பெயரில் கமல் எடுக்க இருந்த படம்! யார் ஹீரோவா நடிக்க இருந்தாங்க தெரியுமா?
இதில் வேட்டையன் படம் மட்டும் முதலில் ரிலீஸ் ஆகும் என்று சொல்லப்படுகிறது. காரணம் என்ன என்பது இப்போதுதான் வெளிச்சத்திற்கு வந்திருக்கின்றன. ஏற்கனவே விடாமுயற்சி படம் தாமதமாவதால் அஜித் நேரடியாகவே லைக்கா நிறுவனத்திடம் பேசி ஒரு நல்ல முடிவை எடுங்கள் அதுவரைக்கும் நான் குட் பேட் அக்லி திரைப்படத்தில் பணியாற்ற போகிறேன் என்று சொல்லிவிட்டு சென்றதாக ஒரு செய்தி வெளியானது.
ஆனால் இதைப் போலவே ரஜினியும் முன்பே லைக்கா நிறுவனத்திடம் பேசிவிட்டாராம். ஏனெனில் வேட்டையன் திரைப்படம் ஆரம்பித்து விடாமுயற்சி படத்தை போலவே வேட்டையன் திரைப்படத்தையும் லைக்கா நிறுவனம் கிடப்பிலேயே போட்டு இருக்கிறது. இதனால் கடுப்பான ரஜினி என் திரை வாழ்வில் இது போன்று எந்த ஒரு படமும் பாதியிலேயே நின்றதில்லை, அதனால் எப்படியாவது இந்த படத்தை முடித்து விடுங்கள். ஜூன் மாதத்தில் இருந்து நான் கூலி திரைப்படத்தில் பணியாற்ற போகிறேன்.
இதையும் படிங்க: அதுக்கு இதுவா… ஃபஹத்துடன் இந்த வாரம் ஓடிடியில் மோத இருக்கும் தமிழ் படம்.. கடுப்பில் ரசிகர்கள்…
அங்கு நான் சென்று விட்டால் திரும்பவும் இந்த படத்திற்கு நடிக்க வரமாட்டேன் என்று சொன்னதாக கோடம்பாக்கத்தில் ஒரு பேச்சு அடிபட்டு வருகின்றது. ரஜினி இதை சொன்னதின் பேரில் அவசர அவசரமாக லைக்கா நிறுவனம் அமேசான் நிறுவனத்தின் இடம் 50 கோடி கடனாக பெற்று வேட்டையன் திரைப்படத்தை முடித்ததாக சொல்லப்படுகிறது. இதன் காரணமாகவே தான் முதலில் வேட்டையன் திரைப்படம் ரிலீஸ் ஆக தயாராகிக் கொண்டிருக்கின்றது என்றும் கூறப்படுகிறது.