ரஜினிக்கு மகனாக நடிக்கப் போவது யார் தெரியுமா?... நெல்சனின் ட்விஸ்ட் ரிலீஸ்…
சிவா இயக்கத்தில் ரஜினி நடித்த அண்ணாத்த படம் ஓரளவுக்கு வெற்றி கண்டது. அதன் பின் ரஜினியின் அடுத்தபடமான தலைவர் 169 படத்தின் அதிகாரபூரவ தகவல் அண்மையில் வெளியானது. ரஜினியின் இந்த படத்தை கோலமாவு கோகிலா, டாக்டர், டான் பட இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்க உள்ளார்.
இந்த படத்திற்கு எப்பவும் போல அனிருத் இசையமைக்க உள்ளார். இப்படி இருக்கையில் இந்த படத்தின் அடுத்த அப்டேட் ஒன்று வெளியாகி இருக்கிறது. இந்த படத்தில் ரஜினியின் மகனாக நடிகர் சிவகார்த்திகேயன் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஏற்கெனவே சிவகார்த்திகேயன் ரஜினியின் தீவிர ரசிகர் என அனைவருக்கும் தெரிந்த ஒன்று. இதன்படி சிவகார்த்திகேயனின் நீண்ட நாள் ஆசையை நெல்சன் அவர்கள் நிறைவேற்றியுள்ளார்.
மேலும் இந்த படத்தில் டாக்டர் பட நாயகி பிரியங்கா மோகன் நடிக்க உள்ளதாக தகவல் வந்துள்ளது. ஒருவேளை பிரியங்கா மோகன் ரஜினியின் மகளாகவும் பிரியங்காவிற்கு சிவகார்த்திகேயன் ஜோடியாகவும் இருக்கலாம் என சினிமா வட்டாரத்தில் தகவ்ல் உலாவி வருகிறது.
என்ன இருந்தாலும் தலைவர் படத்தில் ஒரத்தில் நின்னாலே போதும்..அதுவே பாக்கியம்..என சிவகார்த்திகேயன் நினைத்துக் கொண்டு போகவேண்டியதுதான்.