More
Categories: Cinema News latest news

மீண்டும் அந்த கூட்டணியா…? தலைவர் 170 – ல் ரஜினியுடன் கைகோர்க்கும் வில்லன் கதாபாத்திரம்..? சூப்பரான அப்டேட்…!

தமிழ் திரையுலகில் சூப்பர்ஸ்டாராக வலம் வரும் நடிகர் ரஜினிகாந்த் நெல்சன் இயக்கத்தில் ஜெய்லர் திரைப்படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்புகள் மும்முரமாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. படத்தில் யோகிபாபு, பிரியங்கா மோகன் உட்பட பலரும் நடிக்கின்றனர்.

Advertising
Advertising

படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் எல்லாம் வெளியாகி பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த படம் ரஜினிக்கும் சரி நெல்சனுக்கும் சரி முக்கிய படமாக இருக்கும் என சொல்லப்படுகிறது. ஏனெனில் நெல்சனின் பீஸ்ட் தோல்வியை இந்த படத்தின் மூலம் சரி செய்யும் கட்டாயத்தில் இருக்கிறார்.

இதையும் படிங்கள் :அஜித் எடுத்த அதிரடி முடிவு.? கலக்கத்தில் தியேட்டர் அதிபர்கள்… தரமான சம்பவம் ஆன் தி வே…

ரஜினியின் கடைசி படமான அண்ணாத்த படமும் எதிர்பார்த்த அளவில் போகவில்லை. ஆகையால் இரண்டு பேருக்கும் முக்கிய படமாக இருக்கும். இந்த படத்தை தொடர்ந்து ரஜினி 170 படத்தை டான் பட இயக்குனர் சிபி சக்கரவர்த்தி இயக்குகிறார் என்ற தகவல்கள் ஏற்கெனவே வெளியாகியது.

இதையும் படிங்கள் : ஊறுகா நடிகையா மாறிப்போன தமன்னா!..ஜெயிலர் படத்துலயும் ஸ்கோப் இல்லையாம்!..

தற்சமயம் வந்த செய்தி என்னவென்றால் ரஜினி 170 படத்தில் ரஜினிக்கு வில்லனாக முக்கியமான நடிகரோடு பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டிருக்கிறார்களாம். இரண்டு நாள்களில் அந்த நடிகர் முடிவை சொல்கிறேன் என கூறியிருக்கிறாராம். அவர் வேறு யாருமில்லை. நடிகர் அரவிந்த் சாமி. அவர் ஏற்கெனவே ரஜினியுடன் தளபதி படத்தில் நடித்திருந்தார். மேலும் நீண்ட நாள்களுக்கு பிறகு வில்லனாக தனி ஒருவன், போகன் போன்ற படங்களில் அசாத்தியமான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார். அவரிடம் பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டிருப்பதாக கோடம்பாக்கத்தில் செய்திகள் வந்தவண்ணம் இருக்கின்றன.

Published by
Rohini

Recent Posts