அபூர்வ ராகங்கள் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அடியெடுத்து வைத்தவர் ரஜினிகாந்த். ஆரம்பத்தில் கர்நாடக பேருந்தில் நடத்துனராக பணியாற்றிய ரஜினிகாந்த் சினிமாவின் மீது கொண்ட மோகத்தினால் சினிமா துறைக்குள் நுழைந்தார். ரஜினியின் விடாமுயற்சியே இதற்கு காரணமாகும்.
தனது கடின உழைப்பினால் ஒரே ஆண்டில் பல திரைப்படங்களில் நடித்து கொடுப்பாராம். மேலும் இவர் 16 வயதினிலே, இளமை ஊஞ்சல் ஆடுகிறது போன்ற படங்களில் தனது நண்பரான கமலுடன் இணைந்து நடித்திருந்தார். இவர்கள் கூட்டணியில் படம் வருவது அக்காலத்தில் மிகவும் வரவேற்க்கப்பட்ட ஒன்றாக இருந்தது.
இதையும் வாசிங்க:கோடி கோடியா கொடுத்து ஏன் கஷ்டப்படுறீங்க? சம்பளத்தில் இப்படி ஒரு ஆஃபரா? தனிக்காட்டு ராஜாவா ஜேக்கி
பின் இவர் முத்து, அருணாச்சலம், அண்ணாமலை போன்ற பல திரைப்படங்களின் மூலம் சூப்பர் ஸ்டார் என பெயரையும் பெற்றார். இவர் நடிப்பில் வெளியான எந்திரன், சந்திரமுகி போன்ற திரைப்படங்கள் மிகப்பெரிய வெற்றியை சந்தித்தது. இவரின் சிஷ்யனான ராகவா லாரன்ஸ் நடிப்பில் உருவான சந்திரமுகி2 திரைப்படம் இன்னும் சில நாட்களில் திரைக்கு வரவிருக்கிறது.
மேலும் இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் கடந்த மாதம் வெளியான திரைப்படம்தான் ஜெயிலர். இத்திரைப்படம் வசூலில் இமாலய சாதனை படைத்துள்ளது. இது ரஜினிகாந்தின் 169வது படமாகும். இப்பட வெற்றியை தொடர்ந்து ஜெய்பீம் படம் இயக்குனரான டி.ஜே.ஞானவேல் இயக்கத்தில் தனது 170வது படத்தில் ரஜினிகாந்த் நடிக்கவிருக்கிறார். இப்படத்தினை பிரபல தயாரிப்பு நிறுவனமான லைக்கா நிறுவனம் தயாரிக்கவுள்ளனர். இப்படத்தில் ரஜினிகாந்த் கன்னியாகுமரி மொழியில் பேசபோவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதையும் வாசிங்க:55 கோடிலாம் யாருக்கு வேணும்? இன்னும் பல கோடிகளில் புரள நெல்சன் கையாளும் உத்தி – அப்போ ‘ஜெய்லர்2’?
இப்படத்தில் பாலிவுட்டின் முன்னணி நட்சத்திரமான அமிதாப் பச்சான் முக்கியமான ரோலில் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் இப்படம் கல்வி துறையில் நடைபெறும் ஊழல்களை மையப்படுத்திய கதையாக அமையுமாம். தனியார் நிறுவனங்கள் தங்களிடம் இளைஞர்களை படிக்க வைக்க எவ்வித ஊழல்களை செயல்படுத்துகிறார்கள் என்பதை வெளிக்காட்டும் படமாக அமைந்துள்ளதாம்.
பொதுவாக ஞானவேல் இயக்கும் படங்கள் அனைத்துமே சற்று அழுத்தமான கதைகளை சொல்லகூடிய படங்களாகவே இருக்கும். எனவே இப்படத்திலும் நாம் புதுமையை எதிர்பார்க்கலாம். ஆனால் இவ்வாறான ஊழலை மையப்படுத்திய கதையில் ரஜினி தற்போது நடித்தாலும் அவரின் மனைவி லதா ஆஷ்ரம் எனும் தனியார் பள்ளி ஒன்றை நடத்தி வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இவரின் இப்படம் அவரின் மனைவியின் பள்ளிக்கு ஏதேனும் பாதிப்பை ஏற்படுத்துமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
இதையும் வாசிங்க:குடும்பத்திற்காக வாழ்க்கையையே தொலைத்த செளக்கார் ஜானகி… சூல்நிலை கைதியாக மாறியதற்கு பின் இவ்வளவு காரணங்களா!…
ஐயப்ப பக்தர்களின்…
இசை அமைப்பாளர்,…
தமிழ்த்திரை உலகில்…
Thalapathy 69: விஜய்…
இளையராஜா 'இசைஞானி'…