More
Categories: Cinema News latest news

தலைவர் 170 படத்தில் மேலும் ஒரு சூப்பர் ஸ்டார்!. அப்ப கண்டிப்பா இது பேன் இந்தியா படம்தான்!..

நெல்சன் இயக்கத்தில், ரஜினிகாந்த், தமன்னா, சிவராஜ்குமார், மோகன்லால், ரம்யா கிருஷ்ணன் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள ஜெயிலர் திரைப்படம் வருகிற 10ம் தேதி வெளியாகவுள்ளது. இதற்காக ரசிகர்கள் மிக ஆர்வமாக காத்திருக்கின்றனர். இந்த படம் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் 169வது படம்.

இந்த படம் வெளியாவதற்கு முன்பே ரஜினிகாந்த் அடுத்த படத்திற்கான வேலைகளை தொடங்கிவிட்டார். தலைவர் 170 படத்தை ஜெய்பீம் படத்தை இயக்கிய ஞானவேல் இயக்கவுள்ளார். ஜெய்பீம், பயணம், கூட்டத்தில் ஒருவன் உள்ளிட்ட படங்களை இயக்கிய ஞானவேல், ரஜினிகாந்திடம் ஒரு படத்தின் கதையை கூறியுள்ளார்.

Advertising
Advertising

அந்த கதை பிடித்ததால், முழு படத்தின் கதையையும் எழுதிவிட்டு வந்து கூறும்படி தெரிவித்துள்ளார். ஜெயிலர் படத்தின் படப்பிடிப்பு நடந்த சமயத்தில் முழு படத்தின் கதையை தயார் செய்துவிட்டு வந்து ரஜினிகாந்த்திடம் கூறியுள்ளார் ஞானவேல்.

இதையும் படிங்க- இப்படி ஒரு பகை இருந்தும் உதவி செஞ்சிருக்காரே? ‘பிதாமகன்’ தயாரிப்பாளரை தக்க நேரத்தில் காப்பாற்றிய விக்ரம்

அந்த கதை பிடித்துவிட்டதால், ரஜினிகாந்த் நடிக்க ஒத்துக்கொண்டார். இந்த படத்திற்கான படப்படிப்பு அடுத்த வாரமே தொடங்கிவிடும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது. ஜெயிலர் படம் வெளியான உடனேயே அடுத்த படத்திற்கான படப்பிடிப்பில் ரஜினிகாந்த் கலந்துகொள்வார் என்று கூறப்படுகிறது.

மேலும் இந்த படத்தில் தெலுங்கு நடிகர் நானி நடிக்கவுள்ளார் என்றும் செய்திகள் வெளியாகின. இந்த படத்தின் தோற்றத்திற்கான டெஸ்ட் ஷூட் சமீபத்தில் தான் நடைபெற்றுள்ளது. இந்த படத்தில் பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன் நடிக்கவுள்ளார் என்றும் அவருக்கும் டெஸ்ட் ஷூட் நடந்தது என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

ஏற்கனவே தெலுங்கு நடிகர் நானி இந்த படத்தில் நடிக்கவுள்ளார் என்று கூறப்பட்ட நிலையில் தற்போது இந்த படத்தில் அமிதாப் பச்சனும் இணைந்துள்ளதால், கண்டிப்பாக இது படம் பேன் இந்தியா படமாக தான் உருவாகிறது என்று பேசப்படுகிறது. இதுவரை நேரடியாக தமிழில் ஒரு படத்தில் கூட நடிக்காத அமிதாப் பச்சன் தற்போது ரஜினிகாந்த்துடன் இணைந்து தலைவர் 170 படத்தில் நடிக்கவுள்ளார். 

இதையும் படிங்க- மம்முட்டி, மோகன்லாலுக்கு கிடைக்காத வாய்ப்பு.. தட்டி தூக்கிய தலைவாசல் விஜய்..

Published by
prabhanjani

Recent Posts