‘சிங்கம் சிங்கிளாத்தான் வரும்’ டையலாக்கெல்லாம் போச்சா? வசனத்தை பேசி மொக்க வாங்கிய ரஜினி

rajini
ரஜினியின் ஜெய்லர் திரைப்படம் நாளை வெளியாகும் நிலையில் ஒட்டுமொத்த உலக ரசிகர்களும் மிகவும் ஆர்வத்துடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். ஒரு பக்கம் நெல்சன் ரஜினியை எப்படி இயக்கி இருக்கிறார் என்ற எதிர்பார்ப்பும் ரசிகர்கள் மத்தியில் அதிகமாகவே இருக்கின்றது.
இளம் தலைமுறை இயக்குனர்களுடன் ரஜினியின் ஒத்துழைப்பு நல்ல முறையில் அமைந்தாலும் 70 வயதை கடந்த ரஜினியை வைத்து எந்த மாதிரியான கதையை கொடுத்திருக்க முடியும் என்ற ஆர்வமும் ரசிகர்கள் மத்தியில் அதிகமாகவே இருக்கின்றது.
இதையும் படிங்க : விஜயை போலவே அப்பா மீது கோபத்தில் இருக்கும் மற்றொரு வாரிசு நடிகர்.. பேச்சுவார்த்தையே இல்லையாம்..
ஆனால் ரசிகர்கள் மத்தியில் இன்னொரு கருத்து என்னவென்றால் இனிமேல் ரஜினி தனியாக வந்து ஒரு பெரிய ஹிட்டை கொடுக்க முடியாது என்றும் மல்டி ஸ்டார்ஸ் உள்ள படங்களில் நடித்தால் மட்டுமே அவரால் இன்னும் கொஞ்ச நாளைக்கு தாக்குப் பிடிக்க முடியும் என்று கூறி வருகிறார்கள்.
அதற்கு ஏற்றார் போல ரஜினியும் இந்த ஜெயிலர் திரைப்படத்தில் மோகன்லால், விநாயக் ,சிவராஜ் குமார் இவர்களுடன் நடித்திருக்கிறார். மேலும் லால்சலாம் படத்திலும் கேமியா ரோலில் நடித்திருக்கிறார்.
இதையும் படிங்க : ஒருவழியா மீட்டிங் போட்டாங்கய்யா! ‘விடாமுயற்சி’யில் தேர்வான நடிகர்கள் – அட இவங்களா?
இந்த நிலையில் ரஜினியின் அடுத்த படமான தலைவர் 170 படத்தை ஞானவேல் இயக்க இருப்பதாக செய்திகள் வெளியானது. அந்த படத்திற்கான லுக் டெஸ்டிலும் ரஜினி சமீபத்தில் தான் பங்கேற்றார். ஏற்கனவே அந்தப் படத்தில் தெலுங்கு நடிகர் நானி நடிக்கிறார் என அதிகாரப்பூர்வ தகவல் வெளியானது.
அவருடன் சேர்ந்து நடிப்பு அரக்கன்பஹத் பாசில் இந்த படத்தில் இணைய இருக்கிறாராம். அது மட்டும் இல்லாமல் ரஜினிக்கு ஜோடியாக மஞ்சுவாரியாரும் நடிக்கிறாராம். ஆக மொத்தம் இந்தப் படமும் ஒரு மல்டி ஸ்டார் படமாகவே அமையப் போகிறது.