Categories: Cinema News latest news

ரஜினியோட கடைசி படமா? அடுத்தடுத்து என்னென்ன படம் நடிக்க போறாரு தெரியுமா? லோகேஷிடம் இத கொஞ்சமும் எதிர்பார்க்கல

Rajini – Lokesh: தமிழ் சினிமாவில் இப்போது பரபரப்பாக பேசப்படும் நடிகராக ரஜினி மாறியிருக்கிறார். அதற்கு காரணம் பேக் டு பேக் கையில் வலுவான திரைப்படங்களை வைத்திருப்பதுதான். ஜெயிலர் பட வெற்றியின் தாக்கம் இன்னும் மக்கள் மனதில் இருந்து ஓயவில்லை.

ஒரு மிகப்பெரிய சுனாமியை ஏற்படுத்திய உணர்வை ஜெயிலர் படம் ஏற்படுத்திச் சென்றுவிட்டது. அந்தப் படத்தின் சாதனையை  முறியடிக்க இன்னொரு ரஜினியின் படத்தால் மட்டுமே முடியும் என்ற நிலையில்தான் சினிமா இருக்கிறது.

இதையும் படிங்க: நடித்த படம் வேற.. வெளிவந்த படம் வேற! வினுசக்கரவர்த்தி கதையில் கமல் நடித்த படத்திற்கு வந்த சோதனை

அந்தளவுக்கு ஒரு பென்ச் மார்க்கை கிரியேட் செய்திருக்கிறார் ரஜினி. தற்போது த.ச.ஞானவேல் இயக்கத்தில் நடித்துக்கொண்டு வருகிறார் ரஜினி. கேரளா மற்றும் சுற்றுவட்டாரங்களில் அதற்கான படப்பிடிப்புகள் விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்கிறது.

அந்தப் படத்தில் மஞ்சுவாரியார், பகத் பாசில், அமிதாப் பச்சன் போன்ற பல ஜாம்பவான்கள் நடிக்கின்றனர். இந்தப் படத்தின் மீது மிகுந்த எதிர்பர்ப்பு இருக்கிறது. ஏனெனில் இதுவரை ஒரு கமெர்ஷியல் ஹீரோவாக பார்த்த ரஜினியை எப்படி ஞானவேல் காட்டப் போகிறார் என்பதுதான்.

இதையும் படிங்க: தமிழ் சினிமாவின் முதல் கோடீஸ்வரர் இவர்தானாம்! கோடீஸ்வரராக்கிய அந்த திரைப்படம் எது தெரியுமா?

அடுத்ததாக லோகேஷுடன் ரஜினி இணைய இருக்கிறார். அதுதான் அனைவரும் ஆர்வமாக எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் திரைப்படம். இதைப் பற்றி லோகேஷ் ஒரு பேட்டியில் கூறும் போது இது ரஜினியின் கடைசி படம் இல்லை என்று பல நாள் சுற்றிவந்த சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.

மேலும் அவர் கூறும் போது ரஜினி அடுத்தடுத்து யாருடன் கூட்டணி வைத்து நடிக்க போகிறார் என்பதை தெரிந்து கொண்டுதான் அவரிடம் நான் கதை சொல்ல போனேன். அதனால் இது அவருடைய கடைசி படமாக இருக்காது என்ற ஒரு உண்மையையும் போட்டுடைத்தார்.

இதையும் படிங்க: பால் பப்பாளி!.. வெள்ளை தக்காளி.. பளிச்சென காட்டி பதற வைக்கும் தமன்னா.. பசங்க எல்லாம் பத்திரமா இருங்க!..

Published by
Rohini