தமிழ் சினிமாவில் ரஜினி , கமல் என இரு பெரும் உச்சங்கள் 80களில் இருந்தே கோலோச்சி வருகின்றனர். இளம் தலைமுறையினருக்கு சரியான டஃப் கொடுத்தும் வருகின்றனர். மேலும் கமலின் விக்ரம் படம் வெளியானதில் இருந்தே சினிமா வட்டாரத்தில் ஒரு சூடு பிடித்து விட்டது.
ஒரு பக்கம் ரஜினி – கமல் போட்டி, இன்னொரு பக்கம் விஜய் – அஜித் போட்டி என போட்டிகள் நிறைந்த சினிமாவாக மாறிவிட்டது. இந்த நான்கு பேருமே மிகப்பெரிய சாம்ராஜ்யத்தை உருவாக்கி வைத்திருக்கின்றனர். ஆரம்பகாலத்தில் கமல், ரஜினி இருவருமே சேர்ந்து ஏராளமான படங்களில் நடித்துள்ளனர்.

அதன் பிறகு இருவருக்கும் ஓரளவுக்கு ரசிகர் பட்டாளம் வந்த பிறகு மார்கெட்டை கருதி இனிமேல் இருவரும் சேர்ந்து நடிக்க வேண்டாம். அது நம் ரசிகர்களுக்கு தான் ஆபத்து என்று கருதி ஒன்றாக நடிப்பதை தவிர்த்து விட்டனர்.
நீண்ட வருடங்களுக்கு பிறகு மீண்டும் இருவரும் இணைந்து பணியாற்றும் வாய்ப்பு இருப்பதாக தெரியவந்தது. அதாவது ரஜினி 171 படத்தை லோகேஷ் இயக்க ராஜ்கமல் நிறுவனம் தான் தயாரிக்க இருந்தது. ஆனால் தொழில் ரீதியாக இருவருக்கும் இன்னும் போட்டிகள் இருப்பதால் ரஜினி 171 படத்தை கமல் தயாரிக்க போவது இல்லையாம்.
ரஜினி 171 படத்தை ஒன்று சன்பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இல்லையென்றால லலித் தயாரிப்பார் என்று தெரிகிறது. இதில் ஏற்கெனவே ரஜினியின் அண்ணாத்த படத்தை சன்பிக்சர்ஸ் நிறுவனம் தான் தயாரித்திருந்தது. அந்தப் படத்திற்கு ரஜினியின் சம்பளம் 100 கோடியாம்.

ஆனால் அந்த படம் தோல்வியை தழுவியதால் ஜெய்லர் படத்திற்கு ரஜினிக்கு 90 கோடியாக குறைத்து விட்டதாம். இதையெல்லாம் ரஜினி மனதில் வைத்திருக்கிறாராம். அதே சமயம் விஜயின் லியோ படம் ஆரம்பித்ததில் இருந்தே அந்த படத்தின் அப்டேட்களை ரஜினியும் பார்த்துக் கொண்டிருக்கிறாராம்.
ஒரு படம் மக்கள் மத்தியில் நல்ல முறையில் சேர்வதற்கு அந்த படத்தின் நிறுவனம் பல உதவிகளை செய்ய வேண்டும், அதாவது புரோமோஷன், அப்டேட் பற்றிய விஷயங்கள் என எல்லாவற்றிலும் பட நிறுவனம் ஒத்துழைப்பை வழங்க வேண்டும். அந்த வகையில் லியோ படத்திற்காக லலித் எந்த மாதிரியான ஒத்துழைப்பை வழங்கி வருகிறார் என்று ரஜினி பார்த்துக் கொண்டே இருக்கிறாராம்.

அதனால் ஒரு வேளை லலித்தை கூட தயாரிக்க அணுகுவார் என்று சொல்லப்படுகிறது. படத்தின் கண்டண்டையும் தாண்டி ஒரு பெரிய நடிகரின் படம் மக்களை சென்றடைய லலித் மாதிரியான தயாரிப்பாளர்கள் கையில் தான் இருக்கிறது. அண்ணாத்தை படத்தின் தோல்விக்கு பிறகு ஒரு பெரிய வெற்றியை கொடுக்க வேண்டும் என ரஜினி முனைப்புடன் இருக்கிறார். அதுமட்டுமில்லாமல் கமல் விக்ரம் படத்தின் மூலம் மாபெரும் வெற்றியை பதிவு செய்திருக்கிறார். அதை ஈடுகட்ட எப்படியாவது ஒரு தரமான சம்பவத்தை செய்ய வேண்டும் என எண்ணத்தில் ரஜினி இருக்கிறார் என்று செய்யாறு பாலு கூறினார்.
இதையும் படிங்க : தெலுங்கு படம் நடிச்சிட்டு கமல்கிட்ட இதெல்லாம் எதிர்பார்க்கலாமா? – ஸ்ருதிக்கு அட்வைஸ் செய்யும் நெட்டிசன்கள்!..
