பவர் ஸ்டார் சொன்னதை உண்மையாக்கிய சூப்பர் ஸ்டார்.. இனிமே சிங்கம் மிங்கிள்தான்! களைகட்டும் ‘ரஜினி171’

Rajini 171: ரஜினி தற்போது வேட்டையன் திரைப்படத்தை முடித்து அடுத்ததாக லோகேஷுடன் இணைய இருக்கிறார். த. ச. ஞானவேல் இயக்கத்தில் ரஜினி காந்த் நடித்த படம்தான் வேட்டையன். இந்தப் படத்தில் ரஜினியுடன் பகத் பாசில் , மஞ்சு வாரியார் போன்ற பல முக்கிய பிரபலங்கள் நடித்திருக்கின்றனர். படம் அக்டோபர் மாதம் வெளியாகும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.

இந்த நிலையில் பெரும் எதிர்பார்ப்பில் இருந்த ரஜினி - லோகேஷ் கூட்டணி ரஜினியின் 171வதுபடத்தில் இணைகிறார்கள். இந்த படத்திற்கு அனிருத் இசையமைப்பார் என்று சொல்லப்படுகிறது. படத்தின் போஸ்டரும் வெளியாகி ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியது. போஸ்டரின் படி ரஜினி ஒரு வேளை வாட்ச் மெக்கானிக்காக இருக்கலாம் என்று பல வகையாக டி. கோடிங் செய்ய ஆரம்பித்தார்கள் ரசிகர்கள்.

இதையும் படிங்க: ஆதாயம் இல்லாம செய்யமாட்டார் ஆண்டவர்! கமல் செஞ்ச வேலையால் பணம் கொட்டுச்சு.. மிதப்பில் தயாரிப்பாளர்

இப்படி ரஜினி 171 படத்தின் கதை என்னவாக இருக்கும் என்ற ஆர்வம் அதிகமாகவே ரசிகர்களிடம் இருக்கிறது. இந்த நிலையில் ரஜினி 171 படத்தில் நாகர்ஜுனா நடிக்க போவதாக ஒரு தகவல் வெளியாகியிருக்கிறது. அதுமட்டுமில்லாமல் சுருதிஹாசன் இந்தப் படத்தில் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கப் போவதாகவும் சொல்லப்படுகிறது.

அதுமட்டுமில்லாமல் சில தினங்களாகவே இந்தப் படத்தில் சத்யராஜும் நடிக்க போகிறார் என்றும் வதந்திகள் வந்த வண்ணம் இருக்கின்றன. ஆனால் உண்மையிலேயே சத்யராஜ் இந்தப் படத்தின் கதையை கேட்ட பின்னரே அந்தப் படத்தில் தனக்கான முக்கியத்துவம் என்ன என்பதை அறிந்து கொண்டு பின் முடிவெடுப்பார் என்றும் சொல்லப்படுகிறது. ஆக மொத்தம் ரஜினி படம் என்றாலே ஒரு மல்டி ஸ்டார் படமாகத்தான் அமையும் என்று தெரிகிறது.

இதையும் படிங்க: மகள் கல்யாணத்தை வச்சு காசு பார்த்த ரோபோ சங்கர்!.. இப்ப இதுதான் டிரெண்டு போல!…

இதைத்தான் முன்பு பவர் ஸ்டார் ஸ்ரீனிவாசன் ரஜினி தனியாக வந்து நடிக்க சொல்லுங்கள் பார்ப்போம். அது முடியவே முடியாது. அவருடைய மார்கெட் இனிமேல் மற்றமொழி சினிமா நடிகர்களை சார்ந்துதான் அமையும் என்று பவர்ஸ்டார் கூறியிருந்தார். அதை போலவே ஜெயிலர் திரைப்படத்தில் இருந்து ரஜினி 171 படம் வரை ரஜினியின் படம் மல்டி ஸ்டார் படமாகத்தான் அமைய இருக்கிறது.

 

Related Articles

Next Story