ரஜினி பொன்விழா ஆண்டுக்கான கொண்டாட்டம் தொடங்கியாச்சு.. என்ன விஷயம் தெரியுமா?

Actor Rajini: ரஜினி திரைத்துறைக்கு வந்து கிட்டத்தட்ட 50 ஆண்டுகள் நிறைவடையப் போகிறது. அதனால் ரஜினியின் பொன்விழா ஆண்டை ரஜினி ரசிகர்கள் கொண்டாட தயாராகி விட்டார்கள். அதேபோல் திரையுலகமும் அதற்கான ஏற்பாடுகளை செய்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

இவை எல்லாவற்றிற்கும் ஒரு ஆரம்ப விதையாக ‘சூப்பர் ஸ்டாருக்கு சல்யூட்’ என்ற பெயரில் ஆர் ஜே விக்னேஷ் 50 மணி நேர நான்ஸ்டாப் போட் காஸ்ட் என்ற ஒரு நேரலையை நடத்த போகிறாராம். பிளாக் ஷீப் என்ற சேனலில் ஒரு முக்கிய அங்கமாக இருப்பவர் தான் ஆர் ஜே விக்னேஷ் காந்த்.

இதையும் படிங்க: அடங்கப்பா!. பிக்பாஸை தொகுத்து வழங்க விஜய் சேதுபதிக்கு இத்தனை கோடி சம்பளமா?

இந்த மாதிரி 50 மணி நேர நேரலையை இதுவரை யாருமே நடத்தியதில்லை. இது ஒரு உலக சாதனைக்காக அதுவும் ரஜினிகாந்துக்கான டிரிப்யூட் என்று சொல்லப்படுகிறது. ரஜினிகாந்துக்காக கொடுக்கப்படும் இந்த ட்ரிப்யூட்டில் விஜே அர்ச்சனாவும் ஒரு முக்கிய அங்கமாக இணையப் போகிறார்.

இந்த போட்காஸ்ட் நேரலை செப்டம்பர் 6ம் தேதி மாலை 4 மணியிலிருந்து செப்டம்பர் 8ஆம் தேதி மாலை 6 மணி வரைக்கும் நடக்கப் போகிறதாம். கிட்டத்தட்ட 50 மணி நேரம் இந்த நேரலையை நடத்தப் போகிறார்களாம். இது சென்னையில் உள்ள அம்ஜிக்கரையில் உள்ள ஒரு இடத்தில் நடப்பதாக சொல்லப்படுகிறது.

இதையும் படிங்க: இந்த நடிகையால்தான் சைந்தவியை ஜிவி பிரிந்தாரா? கசிந்த வீடியோ

இதில் அர்ச்சனா இணைவது மிகவும் ஸ்பெஷல் ஆக ஒன்றாக சொல்லப்படுகிறது. ஏனெனில் ஏற்கனவே ரஜினியை அர்ச்சனா பேட்டி எடுக்கும் பொழுது அதிலிருந்து நிறைய அனுபவங்களை நான் கற்றுக் கொண்டேன் என அர்ச்சனா கூறியிருந்தார். அதன் பிறகு அர்ச்சனாவை தனது வீட்டிற்கே அழைத்து கவுரவித்தார் ரஜினிகாந்த்.

அப்போது ரஜினிகாந்தை கட்டி அணைத்தபடி புகைப்படமும் எடுத்துக் கொண்டார் அர்ச்சனா. அந்த சமயம் என்னுடைய அப்பாவிற்கு பிறகு அதாவது என்னுடைய அப்பா ஸ்தானத்தில் ஒருவரை நினைத்தேன் என்றால் அது ரஜினி தான் என மிகவும் உருக்கமாக பேசியிருந்தார். அப்படி கூறிய அர்ச்சனாவே இப்போது ரஜினியை பற்றி 24 மணி நேரம் பல சுவாரசியமான தகவல்களை பகிர்வார் என்றால் அதில் பல சிறப்பம்சங்கள் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க: தளபதிக்குரிய ஃபுட் போடலைங்க! எல்லாத்துக்கும் அவர் ஒருத்தர்தான் காரணம்

Rohini
Rohini  
Related Articles
Next Story
Share it